பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/313

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 571. அகப்பொருள் தானன தான தத்த தானன தான தத்த தானன தான தத்த தனதான *தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சு தேனளி சூழ மொய்த்த மலராலே. சிறும ராவிெ யிற்றி லூறிய காளம் விட்ட சீத நிலாவெ றிக்கு மணலாலே; போதனை நீதி யற்ற வேதனை வாளி தொட்ட போர்மத ராஜ னுக்கு மழியாதே. போக மெலாநி றைத்து மோக விடாய்மி குத்த பூவையை நீயணைக்க வரவேணும்: மாதினை வேணி வைத்த நாதனு மோது பச்சை மாயனு மாதரிக்கு மயில்வீரா. வானவர் சேனை முற்றும் வாழம ராய திக்குள் வாரன மான தத்தை шоботболптбтлт, மேதினி யோர்த ழைக்க வேயரு ணாச லத்து வீதியின் மே நிற்கு முருகோனே.

  • தேது - ஒளி, தேதெரி அங்கையில் ஏந்தி ஆடும்". சம்பந்தர் 3-101-4

f நீதியற்ற வேதன்மீது வாளி தொட்டது - தான் படைத்த திலோத்தமை மீது காதல் கொண்டதனால் பிரமன் நீதியற்றவன். (பாட்டு 522-பக்கம் 196) இனி நீதியற்ற வேதன்' என்பதற்கு வேறு காரணம். முருகவேள் - சூரனைச் சங்கரித்துத் தேவர்களைக் காத்துத் தேவசேனையை மணந்த பின்னர் - "நமக்கு எல்லாந் தந்தது இவ்வேல்" என்றார். அப்போது அருகிருந்த பிரமன் இவ் வேலிற்கு இந் நிலை என்னால் வந்ததன்றோ என நீதியற்ற உரையைக் கூறினான். இதைக் கேட்ட முருகவேள் நங் கையில் வேலுக்கு நீ கொடுப்பதொரு சத்தி யுண்டோ" எனக் கூறிக் கோபித்து இங்ங்ணம் கூறிய நீ மண்ணிடைச் செல்வாய் - எனச் சபித்தனர் (திருமுருகாற்றுப்படை 163-165 - நச்சினார்க்கினியர் உரை.) போதனை நீதி யற்ற வேதன் - என்பதற்கு போதனையும் (ஞானமும்) நீதியும் அற்ற பிரமன் எனவும் பொருள் காணலாம்.