பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகழ் உரை 311 மேருமலையைப் பொடியாக்கிப் பிரமனது காலில் வேல் கொண்டு அடையாளமாக (விலங்கிட்ட) பெருமாளே! (பூவையை நீ அணைக்க வரவேணும்) 572. மன நோயைத் தரும் பெரிய கொங்கைகளைக் கொண்டு நடக்கும் மாதர்கள் பொருட்டு (என்) நெஞ்சு அழிவுறாமல்). சூலைநோய், வெப்பு (சுரம்), மிக்க வாதநோய், பித்தநோய் என்னும் பேர்களுடன் சூழ்கின்ற நோய்க் கூட்டங்கள் (என்னை) அணுகாமல் பாவி எமன் தனது எருமை வாகனத்தில் ஏறி வந்து பாசக்கயிற்றை என்மீது விட்டெறிந்து என்னைப் பிடியாமல் பாவலனாகிய நக்கிர தேவர்க்கு இரக்கம் காட்டிய தேவனே! புலவர்கள் ஒப்பத்தக்க பாடலையும், நன்கு அமைந்த செவ்விய சொற்களையும் எனக்குத் தந்தருள வேண்டும். வேதங்களிற் பாராட்டப்பட்ட விந்து (பீடம்) நாதம் (லிங்கம்) எனப்படும் மூலப்பொருளே! மெய்யிற் கடப்பமாலை அணிந்தவனே! வீரபத்ரருக்கு (உகந்த) கந்தனே! அல்லது - வீரனே! பத்ர - அழகனே, கந்தனே அல்லது, (வீரபத்ர வீரவாள் கொண்ட கந்தனே), முருகோனே! மேருமலையை (கிரவுஞ்சத்தைப்) பிளந்து, சூரனை அழித்துக் கடலிற் குளித்தெழுந்த ஒளிவேலனே! (கோதை) பெண்ணின், அழகிய குறிஞ்சிநிலப் பெண்ணின், ரவிக்கை அணிந்த அழகிய இளநீர் அனைய கொங்கையை அணைந்தவனே! APG நிறைந்து விளங்கும் சோணகிரியில்!/ھئے (அண்ணாமலையில்) உயர்ந்த கோபுரத்தின் கண் வீற்றிருக்கும் பெருமாளே! (பாடல் மிக்க செஞ்சொல் தரவேணும்)

  1. பாவினுக் கிணங்க . என்றும் பாடம் பாவலன் - நக்கீர தேவர்; நக்கீரருக்கு இரக்கங் காட்டின சரிதம் பாடல் 91 - பக்கம் 212-214 காண்க

X விந்து - நாதம் - பாடல் 100.பக்கம் 235 - கீழ்க்குறிப்பு. O கோலமுற்றுயர்ந்த சோலை வெற்பி லங்கு" என்றும் பாடம்