பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 25 458 நிறைந்து நெருங்கி மலரும் செம்மை வாய்ந்த செங்கழு நீர்மலை திருத்தணிகையும், பிறிதும் அங்கு அத்தைக்கு (அதற்கு) உற்ற பின்னும் அங்கு அதனுக்கு (அதற்கு) உற்ற (போன்ற) - (பின்னும் திருத்தணிகை போன்ற) பிற இருப்பும் (பிற ஸ்தலங்களும்), மலை (கிரிவுஞ்சகிரி) துண்டுபடச் செய்யவல்லதான ஒப்பற்ற செவ்விய ஒளி வேலும். திரண்ட புயங்கள் கொத்தாக உள்ளன யாவும் (பன்னிரண்டும்) தெளிதர நெஞ்சத்தில் துப்பு உற்று (அறிவு அடைந்து), மயக்கமே விளங்குகின்ற இவ்வுலகு நீர்க்குமிழியின் நிலையை ஒத்தது என்னும் தன்மையை ஆய்ந்து உணரும். அறிவை அறிந்து (அடைந்து), அத்தற்கு (தந்தையாம் சிவபிராற்கு) அற்றது (ஒரு பற்றும் அற்றுத் தத்துவங் கடந்துநிற்கும் பொருளை)ச் செப்பும் (உபதேசித்த) கடவுளன் (இறைவன்) என்றும், பத்தர்களுடைய அச்சத்தை (பயத்தை) நீக்கி அன்பை அருளுபவன் என்றும், அழகிய கச்சியில் (காஞ்சியில்) நின்றருளும் பெருமான் என்றும், (கூறி) நெகிழ்ந்துருகும் அன்பு பூண்டு, (திருவருளையே) கற்று, மனத்தின் தொழில் ஒழிந்து (மன ஒடுக்கம் உற்றுமனோலயம் பெற்று) அந்த நிலையில் எட்டப்படுவதான கிடைப்பதான) பொருளைப்போப் அடையும் பக்குவத்தை (ஆன்ம பரிபாகத்தை) அடியேனுக்கு எப்போது அருளுவாய். குறளுருவம் எடுத்தவன் (வாமனாவதாரம் கொண்டவன்), சொல்லப்படும் எவரினும் பெரியவன், கல்வி கற்றுக் கொடுக்கவந்த சுக்ராசாரி உள்ளம் நடுநடுங்கி அஞ்ச உண்மையைச் சாதித்து மேலாகச் சொன்ன சிறு குழந்தை (பிரகலா தனுடைய)