பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை குதலையின் சொற்குத் தர்க்க முரைக்குங் கணகனங் கத்திற் குத்தி நிணச்செங் குடர்பிடுங் கத்திக் குற்ற முகச்சிங் கமுராரி, பொறிவிடுந் துத்திக் கட்செவி யிற்கண் துயில்கொளுஞ் சக்ரக் கைக் கிரி சுத்தம் புயலெனும் பொற்புப் பெற்ற நிறத்தன் ஜகதாதை. t புனிதசங் கத்துக் கைத்தல + நிர்த்தன் Xபழையசந் தத்தைப் பெற்ற மடப்பெண் புகலு 0 கொண்டற்குச் சித்தி யளிக்கும் பெருமாளே (8)

  • கிரி என்றார் திருமாலை" பச்சைமா மலைபோல் மேனி"

-தொண்டரடிப்பொடியாழ்வார். t புனித சங்கம் - பாஞ்ச சன்னியம் - இப்பி ஆயிரம் சூழ்ந்த திடம் புரி இடம்புரி ஆயிரஞ் சூழ்ந்தது வலம்புரி, வலம்புரி ஆயிரம் சூழ்ந்தது சலஞ்சலம்: சலஞ்சலம் ஆயிரஞ்சூழ்ந்தது பாஞ்ச சன்னியம் பிங்கலம்.

  1. நிர்த்தன் காளிங்கன் என்னும் பாம்பின் மீது நிர்த்தனம் செய்த பிரான். (பாட்டு 245-2-பக்கம் 114 கீழ்க்குறிப்பு)

X " பழைய சந்தத்தைப் பெற்ற மடப் பெண்" என்றது அரனுடைய சத்தியே அரி ஆதலால் அந்தப் பூர்வ நிலைமையைக் குறித்தது. இதை "அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே" "காவியங் கண்ண ளாகிக் கடல்வண்ண னாகி நின்ற தேவியைப் பாகம் வைத்தார் திருப்பயற் றுாரனாரே" என்னும் தேவாரத்தானும் உணர்க. சத்தியின் ஒரம்சம் ரகூடிச கிருத்தியத்தி னிமித்தம் தனது மாயாவல்லபத்தாற் புருஷரூபங் கொண்டுற்றதே மாயன் என்னும் விஷ்ணுவாம். 'அக்கினியோடு உஷ்ணம் போலச் சிவத்தோடு அபின்னை யாய்க் சகல கரும வாகூரிணியாயிருக்கும் சிவசத்தி - அபரை பாரபரை பரை என முத்திறப்படும் அபரை - பிராமி, வைஷ்ணவி ரெளத்திரி என மூன்று விதப்படும். பிராமி ** சிருட்டித்தல்காரணமாகஇருப்பள்:வைஷ்ணவி' ரகூறித்தல் காரணமாக இருப்பள்: ரெளத்திரி - சங்களித்தல் காரணமாக இருப்பள்." சைவ சமயநெறி (74 (தொடர்ச்சி பக்கம் 27 பார்க்க)