பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருணை திருப்புகழ் உரை 337 மெதுவாகப் பாசத்தினால் உள்ளம் உருகி, (முகந்திட்டு) தாங்கி எடுத்து, (அனை) அன்னை - தாய் - முலை உண்டித்தரகொடு - முலைப்பால் தரக்கொண்டு, உண்டு, ஜொலிப்புடன் வளர்ந்து, வளப்பத்தோடு, துழாவுகின்ற மல்ஜலத்திலே உழைத்துக்கிடந்து துடித்தும், தவழ்கின்ற நடையுடன் (வளர்த்தி எனதகு) - தக்கபடி வளர்கின்ற தெனச் சொல்லும்படி - (வெண்டை) வெண்டையம் என்னும் காலணியும், (பரிபுரம்) - சிலம்பும், தண்டையும், மணிவடமாகிய கழுத்தணியும் அணிவித்துத் தக்கபடி உச்சி வரையும் சீர்திருத்தி, ஒழுக்கத்துடன், விதித்துள்ள முறைப்படி நூல்களைப் படித்து, (வயதேறுவதால்) காம மயக்கம் உண்டாக, தெருவிலே வருகின்ற வியக்கத்தக்க இளமுலை, விசித்திரமான மீன்போன்ற விழி, மேகம்போன்ற கூந்தல், (திங்கள் போன்ற முகம் அல்லது) (பிறைத்துண்டம் போன்ற) கைவளை ஒலிக்க, குயில்போன்ற சொற்கள் வெளிவர, நெருங்கிய ஆடையை நெகிழ்த்தி (தளர்த்தி) மயில்போல நடித்தவர்களின் மேல் (பொது மகளிர் மேல்) காமமயக்கம் கொள்ள, அம் மகளிர் வரும் வழியிற்போய் அவர்களைச் சந்தித்துப் பஞ்சிட்ட படுக்கையின்மேல் (அம் மகளிரொடு) கொஞ்சிப் பலவகைப்பட்ட விசித்ரமான காமலீலைகளுடன அவர்களை அணைத்து, அவருடைய (குமுத) மலர்போன்ற வாயிதழ்களைக் கடித்து, இரண்டு கைகளாலும் நெருங்கியுள்ள அவர்தம் குவிந்த கொங்கைகளை (உரம் அழுத்தி) மார்போடழுத்தி, கண்டத்தினின்றும் சங்குத் தொனிபோலப் புட்குரல்கள் எழும்பக், கூந்தலில் உள்ள மலர்கள் சிந்த (வஞ்சிக்) கொடிபோன்ற இடையில் தங்கிச் சுழற்சியுற (சரத் தொடிகள் சரம் - மணிவடமும், (தொடி) தோள்வளையும் ஒளிவீச, பிறைபோன்ற நெற்றி வியர்வுதர, காற்சிலம்பு ஒலிசெய, உண்டாகும் காம மயக்கு என்கின்ற (சம்பத்து) செல்வத்தின் இந்தச் செயலால் சிற்றின்பமாகிய இருள் கொண்டு வீணாகப் பொருள்களைச் செலவிட்டும், இங்ங்னம் செலவழித்த பின்னர் (சலித்துப்போய்) வெறுப்பு உற்று மிக்க துயரமும் சோர்வும் கொண்டு, உடலை நோய்கள் பீடிக்க, எல்லோரும் பரிகசித்துச் சிரிக்கக் கரிய மயிரும் நரைகொண்டு (வெளுத்து).