பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

344 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 586.சிவபதம் பெற தானதன தானதன் தானதன தானதன தானதன தானதன தனதான வீறுபுழு காணபனி நீர்கள்மல தோயல்விடு மேருகிரி யானகொடு தனபார. மீதுபுர ளாபரண சோதிவித மானநகை மேகமனு காடுகட லிருள்மேவி, நாறுமலர் வாசமயிர் நூலிடைய தேது.வள நானமழி வார்களுட துறவாடி, நாடியது வேகதியெ னாசுழலு மோடணைநின் ஞானசிவ மானபத மருள்வாயே! கூறுமடி யார்கள்வினை நீறுபட வேஅரிய கோல *மயி லாணபத மருள்வோனே. கூட அர னோடுநட மாடரிய காளியருள் கூருசிவ காமியுமை யருள்பாலா; ஆறுமுக மானநதி பாலகுற மாதுதன மாரவிளை யாடிமன மருள்வோனே. ஆதிரகு ராமஜய மாலின்மரு காபெரிய t ஆதியரு ணாபுரியில் பெருமாளே (78)

  • மயிலானபதம் - சூரனுக்குக் கிடைத்த மயில்வாகனப் பதவி.

f ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே என்பதும் காண்க