பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/352

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்காளத்தி திருப்புகழ் உரை 347 587. பொருள் மிகுந்த இந்தப் புவியிடத்தே வாழ்கின்ற சம்பந்தத்தை வகிக்கின்ற இவ்வுடலிலுள்ளே'அன்பு பூண்டவர் போல உள்ள ஐந்து மோசக்காரர்கள் புகுந்து (உலைமேவு) உலைதல்கொண்ட் (அழிதலுக்குக் காரணமான) இத்தகைய தொழில்களை விரும்பி மேற்கொண்டு சஞ்சலப்பட்டு மிகவும் சமுசாரம், செல்வம் இவைகளைச் சுகத்துட்ன் அனுபவித்துச் சுற்றத்தாருடன், மகிழ்ச்சி மிக்குப் புகழும்படி, அன்புடன்ே இந்தவர்ழ்விடத்தை விரும்பிக் குளம்புத் தன்மையுள்ள மூக்கை உடைய கழுகும் நாயும் உண்ணக் குழியில் வைத்துப் பிணமாய் நந்து (கெடுகின்ற) இந்த குடிற்கே குடிலையே. வீட்டையே) - உடலையே விரும்பிப் பயனற்றுப் பதனழிந்து, அழிதல் உறுகின்ற என்னை - (நீ) குறிக்கொண்டு முத்திக்கு மாறுதலில்லாத இன்ப வழியைக் கைப்பற்றி, உலக மாயை, பொய், (அல்லது பொய்யான உலகமாயை), குலம் குடி என்கின்ற பற் றுக்கோடு இவையெலாம் வற்றிப்போகச் சிவஞானமாகிய உனது அழகிய திருவடியைத் தந்தருளுக. திரிபுரம் என்னும் காடு அழிந்து பொடியாய் மறையவும், கரும்பு வில்லை ஏந்திய அழகிய தேகத்தையுடைய மன்மதன் அழியவும், புகைகொண்ட தீ பற்றச் செய்த (அப் புகலோர்) அந்த வெற்றியாளரால் (சிவபிரானால்) அன்புகொண்டு அருளப்பட்டவனே! (உலகுக்குத் தரப்பட்டவனே!) (அல்லது) சிவனுடைய அன்பைப் பெற்று அடியவர்க்கு அருள்பவனே! (346 - ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி)

  1. குரக் கோணத்திற் கழு குளம்புத் தன்மையுள்ள மூக்கையுடைய கழு. கோணம் - மூக்கு.

X மறா - மாறா O "சிவஞானம் பொற்கழல்" - "சுத்த ஞானமெனும் தண்டையம் புண்டரிகம்" . கந்தர் அலங் -92. ஞான பாத பத்மம் திருப்புகழ் #42.

    • ஐ சடலான் - அழகிய தேகத்தையுடைய மன்மதன்.

11 தி பற்று அ புகலோர் . அக்கினி பற்றச் செய்த அந்த வெற்றி யாளர். புகல் - வெற்றி.