பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்காளத்தி திருப்புகழ் உரை 349 அடித்து எட்டுத் திசைகளில் உள்ளோர்களும் பயப்படும்ப்டி ஒப்பற்ற (தனிப்பட்ட) பயங்கரமான உருவத்துடன் புகுந்த சூரன் அழிந்துபோம்படி அவனை (புகழ்ப்போர் சத்திக்கு) போரிற் புகழ்கொண்ட சத்தி வேலாயுதத்துக்கு இரையாக (உணவாக) (ஆனந்தத்து) - மகிழ்ச்சியுடன் அருளியவனே! அழகிய (வள்ளிமலைக்) காட்டில் அன்பு பூண்டு அந்தக் (குறக் கோலத்துச் செயலாள்) குறக்கோலம் பூண்டிருந்த செய்கையளாம் வள்ளி பயப்பட்டபொழுது - "விளங்கும் சீர்பெற்ற (இந்த) யானைக்குப் (பயந்து) நீ ஆழாதே வா" என்று சொல்லி அவளை அணைத்தவனே! சிவகதி அடையும் பேற்றுக்குக் கடையவனாகிய நான் வந்து உட்சேருதற்கு வேண்டிய சிறப்பினை எனக்குத் தந்து கொ(ள்)ளு என்னை ஏற்றுக் கொள்வாயாக! ஞானமும் பொலிவும் அழகும் நிறைந்த ஸ்தலமாகிய காளத்தி ஊரில் வாழ்கின்ற கந்தப் பெருமாளே! (அல்லது சீர்வைத்து என்னை (க் கொளு) - என்னை (ஆட்) கொண்ட கந்தப் பெருமாளே! (சிவஞானம் பொற்கழல் தாராய்) 588. சிரத்தானத்தில் (சிரஸ்தானத்தில்) தலைகொண்டு (உன்னை ஒழிய ஒருவரையும்) பணியாமலும். உலகோர்தம் பாசங்களில் நோக்கம் செலுத்தாமலும் (உலக ஆசைகளில்) அகப்படாமலும் (நான் உய்யுமாறு நீ என்னை) (வருத்தா) வருத்தி - வரவழைத்து (ஏன்று கொண்டு) மற்று நிகரில்லாத மலர்போன்ற (உனது) திருவடிகளிற் சேர்த்து எத்தனை (வஞ்சகனாகிய) என்னை ஆண்டருளுவாயாக (நிருத்தா) கூத்தாட வல்லவனே தலைமைத்தானம் கடவுள் தானம் வகிக்கும் நேசனே!