பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபு. 29 திருமாலும் பிரமனும் வாப் திறந்து தமது குறைகளை எடுத்துக்கூறவேண்டி ஒன்றுகூட, தேவர்கள் வணங்கி நிற்க ஊடுருவிச் சென்று அசுரர்களுடைய உடலைக் குத்தியும் முறித்தும், அப்போது அவ்விடத்தில் ஒருகோடி பேய்கள் நின்று, தாளம் போட்டும், தாளச்சதி அறுத்தும், பல வாத்தியங்களை முழக்கியும், பரிகாசப் பேச்சுக்களைப் பேசியும், துர்க்கையுடன் சேர்ந்து குச்சரி என்னும் ராகத்தை மெச்சி வியக்கும்படிப் பாடியும் வடவா முகாக்கினி போலத் தியை வெளிப்படுத்தும் சிவந்த கண்ணை விழித்தும், பவுரி (மண்டலமா யாடும் கூத்து வகையை) ஆடி, எட்டுத் திசைகளையும் அதிர்ச்சியுறச்செய்தும், (பிணங்கள் விழும்) போர்க்களத்தில் நுழைந்து ஒன்று சேர்ந்து, நடனஞ் செய்யவும், (பகையாம் அசுரர்களைத்) தாக்கி. எவ்விதமான படைகளையும் பொருது வெற்றி பெறவல்ல சத்திவேலை ஏந்தும் (பத்மம்) தாமரையன்ன திருக்கரங்களைத் தியானித்தும், சரவணன் என்றும், காஞ்சிமாநகர் அழகன் என்றும், பின்பு பலவாறு போற்றியும் இவ்வாறு பரவுதல் என் சித்தத்தில் உதிக்கும்படித் தொண்டுசெய்யும் பேற்றை அடை வேனோ! பெரிய, குளிர்ந்த குங்குமக்குழம்பு கொண்ட, ரவிக்கை யணிந்த மலைபோன்ற கொங்கையும், நுண்ணிய வஞ்சிக் கொடி போல இளைத்த இடையும், ப்ரிதி ஒழிந்து ஒக்க (ப்ரிதி ஒக்க ஒழிந்து)-விருப்பம் முழுதும் ஒழிந்து ஒர் இசையில் தான் அதிக விருப்பம் என்னாமல் - எல்லா இசை வகைகளையும் ஒன்று போலப் பாவித்துக் கைக்கிளை, துத்தம், குரல் முதலான