பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 357 591. துதிக்கையை உடையவரும், இளமை வாய்ந்தவரும், ஜோதிசொரூபம் உடையவரும், ILITTGujK5, T முகத்தைக் கொண்டவரும், வேதப்பொருளும், கற்பக விநாயகர் என்னும் திருநாமங் கொண்டவருமான கணபதியின் சகோதரப் பெருமாள் நீதான் . கற்பு நிறைந்த சிவகாமசுந்தரியும், நித்திய கலியாணியு மான பார்வதியின் (கத்தர்) தலைவராம் சிவபிரானுடைய குருநாதப் பெருமாள் நீதான் . விந்து ரூபம் - மழைத்துளி பெய்யும் மேகவண்ணம் கொண்ட பூரீராமருக்கு மருகனான - ஜெய வேற்கைப் பெருமாள் நீதான் - மலைகள் உள்ள அண்ட கோளகைகள் அஞ்சுகின்ற வலிமையுடன் (கலாபத்தை) வீசும் வெற்றி மயிலை வாகனமாகக் கொண்ட பெருமாள் நீதான் அழகிய முகங்கள் ஆறுழ் முத்துமணி (மாலைகள் தித்திமிதி திதென்று தாளமிட்டு விளையாடும் அழகிய குமாரப் பெருமாள் நீதான் - சுத்த வீரனே! சூரர்கள் அழிந்து விழும்படி வேலாயுதத்தைச் செலுத்தின பெருமாள் நீதான்! கவிராஜப் பெருமாள் நீதான் - (துப்பு) தூய்மை கொண்ட வள்ளி நாயகியோடும் அந்தப் புலியூர் என்னுந் தலத்தில் மேவும் பெருமாளே சுத்த சிவஞானப் பெருமாளே!