பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 363 594. வண்டு போன்ற கயல்மீன் அனைய கண் தன் சுழற்சியால் புருவமாகிய வில்லில் தொடுக்கப்பட்ட அம்பை நிகர்க்கவும், (அணிந்துள்ள) மாலையில் வண்டானது சுற்றுகின்ற கூந்தலானது மேகத்தை நிகர்க்கவும், (கமுகென்ப க்ரீவம்) க்ரீவம் - கழுத்து கமுகு போலுளது என்று சொல்லும்படியும் . மந்தரமலையை, மதம் பொங்குகின்ற யானையின் பருத்த தந்தங்களை நிகர்த்து கொங்கைகள் முன்னிட்டுக் குவியத் தெருவிலே வந்து, வஞ்சித்துச் சண்டைசெயும் (அல்லது) மாறுபடும் மகளிர் தமது கையிற் கிடைத்த பொருளின் பொருட்டுக் காட்டும் அன்பினாலே - (தமது வீட்டுக்குள் அழைத்துக் கொண்டுபோய்த் தழுவுங் கைகளால், தட்டிலே பொருளைப் பெற்றவுடன், வஞ்சனை எண்ணத்துடன் (சரசம்) காமலிலைகளைச் செய்தும், புகழ்ந்தும், கொஞ்சிப் பேசுகின்ற குழலையுடையார்). ஆகிய பொது மாதர்கள் பொருட்டு இவ் வண்ணம் நான் மனம் நொந்து நைந்து உடம்பு வாட்டம் அடையாமல் - (கொண்டு சத்தி) சக்திகொண்டு தனது ஆற்றல் கொண்டு, கடலை உண்டு உமிழ்ந்து உனை அடுத்த உனது அன்பராம் அகத்தியருக்குப் பணிசெய்து தொண்டு பட்டு, நறுமணம் வீசும் செஞ்சாந்துள்ள திருவடிகளைப் பற்றி (முத்திக்) கரையை என்று அடைவேன்! o அண்டம் (அண்டங்களில்) (மிட்டி) (மிண்டி) - நெருங்கி, குட) வளைய சூழ) டிண்டிமிட்டி என்று குடந்த கொட்ட) குடந்தம் - குடம் (குடமுழ அல்லது கடவாத்தியம்) கொட்ட முழக்கச்செய்து (அவ் வொலிக்குத் தகுதகுந்த டிங்கு" என்னும் ஒலி (தொக்க) ஒன்றுகூடத் (தமடம்) தம் பட்டம் - (பறைவகை), (சகட்டை) சகண்டை - துந்துபி என்னும் முரசு, சிறந்த (கொம்பு) ஊதுகொம்பு (டக்கை) - (இடக்கை) இடக்கையாற் கொட்டும் தோற்கருவி இவை தமக்கு (இடல்) உதவியாய் ஒலிக்கும் தாளம்.