பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/370

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 365 அண்டங்களும், எட்டுத் திசைகளும், (உம்பல்) அவர்ட கஜங்களும், பாம்பின் கூட்டங்களும், (அவர்டநாகங் b) மேகமும் குலைபட்டு, மலைகளும் பொடியாய், பொறிகள் ஐந்தையும் (அவித்து) கெடுத்து திரண்ட அண்டங்களில் முழுமையும் தூசி உண்டாக (எதிர்த்து) வந்த சூரர்கள் (கண்டம்) கழுத்து அறுபட்டுப்போய், குடலும், எலும்பும், நெகிழ்ந்து (தளர்ச்சியுற்று) (தசனம்) பற்களைக் கடித்துக் குடிலம்) - ச்டை (தலைமயிர்) சிவப்ப, ரத்தம் கன்க்ளினின்றும் வெளிபட்டுச் சிதற (அந்த ரர்களின்) தலையைப் பந்து அடிப்பது போல் அடித்துத் தள் யெறிந்து, கையில் (இலங்கு) விளங்கும் வேலாயுதத்தால். கண் குளிர்ச்சி அடைந்து மகிழ, விண்ணுலகம் (இழந்த பொலிவு மீண்டும்) வரப்பெற்றுச் செழிப்புறத் தன்னைப் புகழ்ந்த இந்திரனுக்கு அவனுடைய இந்திர பதவியை (அளித்து) அநுக்ரகஞ் செய்து கொடுத்து (கனகம்பலத்தில்) ப்ொன்னம்பலத்திற் குறமகள்) வள்ளியம்மையின் பக்கத்தில் வீற்றிருக்கும் தம்பிரானே! (சரணம் பிடித்துக் கரை என்று சேர்வேன்) 595. இருள் போன்ற கூந்தலாகிய கார் (மேகத்தைக் கொண்டவர்கள், முகம் சந்திரனை ஒத்தவர்கள், மஞ்சள் விளங்கும் கையினர்கள், அம்பு போன்ற கண்களை உடையவர்கள், (கொந்தளம்) தலைமயிர்ச் சுருள் காதைக் கொஞ்சும்படிக் கொண்டவர்கள், செம்பொன் மாலை கழுத்தில் அணிந்து, அசைகின்ற கொங்கைகள் (உ.ம்பல்) யானைபோலும், (குவடு) திரட்சி கொண்டதான மலையாய், அதில் நறுமணமும் சிறிதளவு தேமலும் தோன்ற, மின்னல்போல (அங்கு அமைந்து இடை) இடையானது அங்கு அமையப்பெற்று, பட்டு ஆடைகொண்டு குதிக்கால் மறையும்படி உடுத்து, அண் (அடுத்துள்ள) சிலம்பும், ஒலிக்கின்ற பாடகம் என்கின்ற காலணியும், (சரி) கைவளையுடன், (ஒத்து) ஒலிக்க உள்ளவர்களாய்