பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/372

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 367 அழகிய கிளி, குயில், நாகணவாய்ப்புள் இவைகளின் குரல் கொண்டவர்களாய், அழகிய கையில் பொன்னைப் பறிக்கின்ற (கொள்ளைக்காரர் போன்ற) விலைமாதர்களை (நான்) நெருங்கி, அந்த (மன்டையர்க்கு) வேசையர்க்குச் சேவக வேலை செய்வது என்று தொலையுமோ! சங்கு அழகிய தவில் (மேளவகை), (காளம்) ஊது கொம்பு, அவையுடன் (துாரியங்கள்) முரசப்பறைகள், (துந்துமி) பேரிகை ஆகிய வாத்தியக் (காடு) கூட்டம், மிகுதி. அதிர்ச்சி செய்து ஒலிக்க, அழகிய செந்தமிழ்ப் பாடல்கள் பாடவ்ல்ல பாணர்சாதியர் அருமையாக அன்புடன்பாட, (அண்டகோசம்) அண்ட கடாகம் (அண்ட உருண்டையின் மேல் ஓடு) வரையில் உள்ளோரும். சந்திர மண்டலத்தில் உள்ளோரும் வணங்கவும், (இந்திரன் குலத்தார்) தேவர்கள் பூமாரி சொரியவும், (தந்திரம் புய்த்தார்) (யாழ் ஏந்தும் கையினர்) - கந்தருவர் புகழ்ந்திடவும், எதிர்த்து வந்த குரனுடைய செவ்விய கைகளும், சிரத்துடன் பாகப்படும்படி (துண்டாக அற்றுப்போகவும்), யமனுடைய ஊரில் ஏற வஞ்சகர் (வஞ்சகராம் அரக்கர்கள்) போய் சேரவும், சிறந்த அம்புகளைச் செலுத்தி நடனம் புரிந்த கந்தவேளே! திங்களின் (பூரண மதி) போன்ற, குளிர்ந்த ஒளியை உடைய முக அழகு கொண்டவளும், வலிய கொங்கைகளைக் கொண்ட மென்மை வாய்ந்தவளுமான (குறப்பாவை) வள்ளியுடனே செம்பொன்னாலாய அம்புலத்தில் கனக சபையில் - மேம்பட்டு விளங்கு அருளும் தம்பிரானே! (பெண்களொடண்டிஊழியஞ் செய்வதென்று போமா) 596. (கொந்தளம்) தலைமயிரில் புனுகுசட்டமும் வாசனையுள்ள நல்ல பன்னிரும் நிரம்பச் சிறப்பாக அணிந்துள்ள மந்தர மலைபோற் பருத்த கொங்கைகள் என்னும் வெண்ணிறமுள்ள யானைத் தந்தங்கள் பொருந்தியுள்ள (மடமாதர்) அழகிய மாதர்கள். "கொண்டவ" அல்லது கொண்டவள்" என்பது பாடமாயின் சந்தம் தெளிவு பெறும் வன்கொங்கை சிந்துரம் பனைக்கோடு கொங்கை குறமங்கை" ஆதலின்-திருப்புகழ்-598. ii புழு கெந்தபுழுகு கந்த

  1. ரம்ப-நிரம்ப . திருப்புகழ் 606-பார்க்க