பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/389

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • சுத்திடும் பித்திடும் சூதுகற் குஞ்சதியர்

முற்பணங் கைக்கொடுந் தாருமிட் டங்கொளுவர் # சொக்கிடும் புக்கடன் சேருமட் டுந்தனகும் விஞ்சையோர்பால். தொக்கிடுங் கக்கலுஞ் சூலையக் கம்பிளவை விக்கலுந் துக்கமுஞ் சீதபித் தங்கள்கொடு துப்படங் கிப்படுஞ் சோரனுக் கும்பதவி யெந்தநாளோ, ஆத்திரங் கற்றசண் டாளர். Xசத் தங்குவடு பொட்டெழுந் திட்டுநின் றாட Oஎட் டந்திகையர் கொற்றமுங் கட்டியம் பாடநிர்த் தம்பவுரி கொண்டவேலா. கொற்றர்பங் குற்ற *சிந் தாமணிச் செங்குமரி பத்தரன் புற்றனந் தாயெழிற் கொஞ்சுகிளி கொட்புரந் தொக்கவெந் தாடவிட் டங்கிவிழி மங்கைபாலா;

  • சுத்திடும் பித்து இடும் - தங்கள் வசத்திற் சுழலும்படியான பித் தேற்றுகின்ற, சுத்து - இது சுற்று என்பதன் மரூஉ

f கை கொடு உந்து ஆரும் கையிற் கொண்டு செலுத்தும் யாரையும். # சொக்கு இடும்பு கடன் சேரு மட்டும் தனகும் - சொக்கும் படியான வார்த்தைகளைச் சொல்லிப் பொருள் பற்றிக் கொள்ளும் வரையில் லீலாவிநோதம் பாராட்டும். X சத்த அம் குவடு - ஏழு மலைகள். O எட்டு அம் திகையர் - அஷ்டதிக்குப் பாலகர் கிழக்கில் இந்திரன்; தென் கிழக்கில் - அக்கினி, தெற்கில் - யமன், தென் மேற்கில் நிருதி, மேற்கே - வருணன், வடமேற்கில் வாயு வடக்கில் குபேரன், வடகிழக்கே - ஈசானன்.

  • சிந்தாமணி - இது விரும்பிய அனைத்தையும் கொடுக்க வல்ல தெய்வமணி - திருப்பாற்கடல் கடைந்தபோது தோன்றிய மணி, இந்திரனிடம் இருப்பது (திருப்புகழ் விநா-2, பக்கம்-10 கீழ்க் குறிப்பு). "சிந்தாமணி தெண்கடலமிர்தம் தில்லையானருளால் வந்தால் இகழப்படுமே” - திருக்கோவையார் 12.