பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 387 விசித்ரமான அழகிய குறப்பாவை (வள்ளி)பாற் சென்று சேர, செட்டி வடிவு எடுத்து வஞ்சித் து வந்து விளையாடல் செய்து கூத்துக்கள் புரிந்து, நுண்ணி ஞானத்தவளாம் அந்த வள்ளி உனது அழகிய புயங்களிற கூட அவளை முழுதும் கலந்து சேர்ந்த எங்கள் தலைவரே! ஞானபரன், பரம்பொருள், சீர் விளங்கும் அழகிய புலியூரில் (சிதம்பரத்தில்) இருக்கும் ருத்ர மூர்த்தி, இலைகளையுடைய அழகிய சூலாயுதத்தைக் கொண்ட தலைவன், பொன்னம்பலத்தில் "தித்தி" என்னும் தாளத்துக்குத் தக்கபடி நடிக்கும் (சிற்றம்பலவர்) நடராஜப் பெருமானது தம்பிரானே! (சோரனுக்கும் பதவி எந்த நாளோ) 602. கொங்கையிற் செஞ்சாந்தையும் சந்தனத்தையும் (கொண்டு சேர்த்து) - அப்பி, சங்கிலிக் கொத்துக்களும், மினுக்கும் பொன்னாலாய கூட்டமான அணிகலன்களும் அணிந்து, (தமது) அழகில் (ஈடுபட்டவரை) அவர்தம் (நல்ல பண்புகளை அழித்து) நற்குணங்களை அழித்துக் கண்களைச் சுழற்றியும், சண்பகப்பூவைக் கூந்தலில் வைத்தும் (அலங்கரித் தும்) (தரம்) தங்களது மேன்மை விளங்க (உடலை) அசைத்தும், பொன் தகை - பொற்சரிகை பொருந்திய பட்டாடையைத் தரித்தும், பின்பு சிரித்தும், கொண்டுவந்து அழைத்துச்சென்று, கூந்தலை அன்புடனே அசைத்தும், வள்ையல்கள் சப்திக்கும் தமது கைகளாற் கொண்டுபோய் அனைத்துப் பெருங்களிப்புடன் உறவு பூண்டு.