பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/412

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புக ழ் உரை 407 (எல்லா உயிர்களோடும்) மெய்களோடும் கலந்தும் வேறாகத் தனித்தும் நிற்கும்) அகர எழுத்துப்போலச் (சித்தும் அசித்தும் ஆகிய பிரபஞ்ச முற்றும் தோய்ந்தும் வேறாகத் தனித்தும் நிற்கின்ற) திரு.செல்வி, (உயிர் பண்புற) ஆத்ம கோடிகள் ரக்ஷணையைப் பொருந்த (அரி) திருமால் (என்னும் காக்கும் கடவுள்) ஆகி. விளங்கி நிற்கும் (சுடரொளி) பேரொளி, என் கண்ணில் விள்ங்கி மகிழும் சிவகாமி, அமுத இன்பத்தைப் பொழிகின்ற பராசக்தி, (அந்தரி) பராகாச வடிவினள் (அல்லது சிதா காசத்தில் உறைபவள்) அத்தகைய உமாதேவியின் பாகத்தில் உள்ள அரனாருக்கு (சிவபெரு. மானுடைய) ஒப்பற்ற குழந்தையே! (அசுரன்) சூரனுடைய தலை, தேர், குதிரை, வில் இவையெலாம் கெட, (அவனுக்குக் காவலாயிருந்த கோடு) எழுகிரி, அம்பு முதலிய பல படைகள்.இவை யாவும் பொடிந்து தூளாகக், கடலும் கிரெளஞ்சமலையும் சாய்ந்து அடங்கப் போரை மேற்கொண்டு அம்பைச் செலுத்தின செவ்விய கரத்தினனே! ஒளி வீசும் செஞ்சுடர்ச் சூரியன் போல விளங்குபவனே! மகர மீனைக் கொடியாகவும், நிலாவைக் குடையாகவும் கொண்ட மன்மதனது அழகிய தந்தையாம் திருமாலின் மருமகன் என்று அழகிய விருதும் (வெற்றிச் சின்னமும்) பல முரசம் என்னும் பறைகளும், சாத்திர நூல்களும் புகழ்ந்து நிற்கப், பிரமனது தலை உடைந்து போம்படி அவனைக் குட்டித் திருநடனம் (திருவிளையாடல்) கொண்ட வேலனே! (மாழை) பொன்னின் (கதிர்) ஒளி கொண்ட வேலனே! அழகு நிறைந்த இந்திரனது மகள் தேவசேனையொடு அழகிய திருமணத்தைச் செய்துகொண்டு, (பின்பு மோக சரசம்) காமலீலைகளைக் குறமகள்) வள்ளியொடு பங்கு கொண்டு விளையாடித் திருவளரும் அழகிய புலியூரில் (சிதம்பரத்தில்) (யாவரும்) கண்டு களிக்கும் திரு அம்பலத்திலே விளங்கும் குமரேசப் பெருமாளே! (பத அழகும் தமியேனுக்கருள்வாயே)