பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/432

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 427 கோடுகள் கொண்ட (பாளிதம்) பட்டுப் புடவைகளால் து உடையார்) முன்னிட்டு விளங்கும் உடைகளைத் தரித்தவர், இடையானது துடிபோலவும், நூல்போலவும் உள்ள் அ கொண்டவர் (அல்லது இடையானது துடிகளையும் நூலையும் ஒக்கும், அழகு நிற்ைந்த அல்குல் நறுமண்ம் வீசுகின்ற ரம்பை போன்றவர், பொருளுக்காகக் கூடுதலை உடைய (பொது) மாதர், மயில்கள் போல நடம்புரிபவர், நல்ல தன்மைக் குணத்தின்பாற் படாத வியப்பான செயல்களைக் கொண்டவர், Fo ப்படிப்பட்ட பொது மாதர்களின் வலையில் மனம் கலக்குண்டு அடியேன் اہلئےழி வுறலாமோ? உன்னுடைய அன்பைத் தந்தருளுக. தனக்கு ஒப்பில்லாத சுயம்புவான தேவதை, மேகம் போன்ற கூந்தற் பாரத்தைக் கொண்டவள், பொன் நிறமான சடையை உடையவள், சிவை, எல்லா உலகங்களுள்ளும் (மேம்பட்ட) அழகி (பார்வதி) பெற்ற கந்தவேளே! நூற்றுக் கணக்கான பருத்த மணிமுடிகள் பொடியாக அல்லது (ஆதிசேடனுடைய) நூற்றுக் கணக்கான பனா மகுடம் (படந்தாங்கும் மணிமுடிக்ள் பொடியாய்விட குலைய) வும், அசுர சேனைகள் *àìçÃÊ4 ஒப்பற்றதும் நெருப்பைக் கொண்டதுமான வேலாயுதத்தை செலுத்தின பராக்ரமசாலியே! செம்பொன்னிற அழகன்ே! அருமையான மேனியைக்கொண்ட இலங்கை (அரசன்) இராவணனுடைய முடிகள் (தலைகள்) அற்று விழும்படி அம்பைச் செலுத்தின் மாயவனும், பதினான்கு உல்க்ங்கள் முழுமையும் உண்டவனுமான திருமாலின் சிறந்த மருகனே! தேவ்ர்கள் ஒதிப் புகழும் அழகு வாய்ந்த ஒளியை உடையவனே! அழகுகொண்ட திருமுகங்களை உடையவனே அல்லது அழகு வாய்ந்த முகத்தைக் கொண்ட தேவதை (தேவசேனை), உன் ஆசைக்கு உகந்தவளாம் மலைநில ஊர் (வள்ளிமலையில்) வாழும் வள்ளி நாயகி ஆகிய இருவர்மீதும் அருள்கொண்டு அவர்களுடன் லிலை செய்து (அல்லது அழகுள்ள முகத்தைக்கொண்ட தேவி, அழகி, குறிஞ்சியில் வாழ்பவளாகிய வள்ளிநாயகி மீது அருள்பாலித்து அவளுடன் லீலை செய்து) சிதம்பரத்தில் (உனது அன்பு தாராய்)