பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/440

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 435 அருள் வழியைக் காட்டுகின்ற கலைச் செல்வ வழியைக் காட்டும் செல்வனே! வன்மையையுங் கொடுரத்தையும் காட்டும் வலிய அசுரர்களைக் கோபித்து அழித்தவனே! உனது திருவடியைப் போற்றித் தாமரை மலராற் கட்டப்பட்ட இண்டைமாலையை (உனது) முடியில் சூட்ட வல்ல அடியார்களுக்கு நல்ல பெருமாளே! (அல்லல் செயலாமோ?) 619. முல்லை மலர்போலவும் முத்துக்கள் உதிர்ந்தன வைகளால் வரிசை அமைந்தன போலவும் உள்ள பற்களையும், வள்ளைக்கொடி போல உள்ள நல்ல காதில் விளங்கி அசைகின்ற குழைகளையும், முல்லைமலர் மாலை சுற்றி உள்ளதும் அசைகின்ற பூங்கொத்துக்கள் நிறைந்துள்ளதும் (குழல் அலைபோது). (அலைபோது அ குழல்) அலை வீசுவதுபோலப் புரளும் அந்தக் கூந்தலையும், அழகாய் எடுக்கப்பட்ட வில்லைப்போன்ற ஒளி பொருந்திய நெற்றியையும், பார்வை அம்பான கயல் (அம்பான கயல் பார்வை) அம்பு போன்றதும் கயல்மீன் போன்றதுமான கண்ணையும், கிளியின் குரல் போன்ற குரலையும் உடையவர்கள்; இதழ்களை உடெய தாமரைப்பூ என்னும்படியான மலர் முகத்தையும், முன்னல், கமுகார், களம், (கமுகார் முன்னல் களம்) கமுகு போன்றதும் (முன்னல்) நினைத்தற்கு இடமானதுமான நெஞ்சையும், தோய் சுணங்கு (சுணங்கு நோய்) தேமல் பரந்துள்ளதான கொங்கையாகிய (மலை யானை) எதிர்த்துவரும் யானை போன்றதும் வன்மை வாய்ந்ததுமான குன்றையும், ஆலிலை போன்றதும் பிள்ளைப் பேற்றுக்கு இடம் தருவதுமான வயிற்றையும், அவ் வயிற்றின் மேலுள்ள ஆடை அமைந்துள்ள நூல்ப்ோல் நுண்ணிய இடையையும், காம்த்திற்கு நிதி இடம் போன்ற அல்குலையும், வாழை போன்ற தொடையையும் உடையவர்கள்; மலர் அன்ன (பூப் போன்ற) காலில் அணியப்பட்டு அசைகின்ற சிலம்பின் ஒலியானது.