பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 437 மல்லிட்டு வாதாடுவதுபோல மாறுபட்டு ஒலிக்கவும், பட்டாடையானது தன்மேல் படும்போது எல்லாம் அசைந்து ஒலிக்கவும், காம மயக்கத்தால் தள்ளுகின்ற நடையோடு கூடி (சற்றே மொழிந்து) சிற்சில வார்த்தைகளைப் பேசி ஆசை பூண்டு சாமர்த்தியம் உள்ளவர் போல பொற்காசுகளைத் (தம்மிடம் வருபவரிடம்) கொள்ளை கொண்டவர்கள் ஆகிய அத்தகைய மாதர்களின் மீது காமமயக்கம் கொள்ளலாமோ? துன்பத்தைத் தரும் வினை தொலையவும், அசத்தான குற்றங்கள் நீங்கித் தொலையவும், இன்பமான உள்ளம் பொருந்தி அமையவும் அருள்வைத்து ஆளுகின்ற என்னுடைய தந்தையாம் சிவபெருமான் மகிழ்ச்சி உற (அவரது) (அள்) காதில் (அமைய) குளிர்ந்து பொருந்த (ஞானவித்து) ஞானத்திற்கு விதை போன்ற மூலப்பொருளை உபதேசித்த கந்தனே! குமரனே! முருகோனே! அன்னம்போன்ற நடையினளாம் குறப்பாவை - குறவர் தம் பாவை, பந்தாடுகின்ற விரல்கள் உடைய என்னுடைய தாய், வெள்ளை முத்துக்கள் போன்ற கடப்பமலர் விளங்கும் கூந்தலை உடைய அம்மை, வன்மைவாய்ந்த கொங்கை மலைகள் இரண்டினைக் கொண்டவள் - ஆகிய வள்ளி நாயகியின் மணவாளனே! (செல்லு) மேகங்கள் படிவதற்கு இடமான ஏழு கடற் பரப்புக்களும் பிளவுண்டு சிதறி ஒலிசெய, வலிய அசுரர் சேனை அழிவுபட்டு இறந்து ரத்தம் பரவித் திசைகளில் ஒடும்படி செய்து விளங்கும் அழகிய திருமுகத்தைக்கொண்ட சுடர் வேலனே! தெளிவான தமிழ்ப்பாடலைப் பாடி ஆசையால் (உன்னை) அடியார் புகழ்ந்து கொண்டாடவும், (சசி வல்லியோடு). இந்திராணியின் மகள் தேவசேனையோடு கூடி அமர்ந்து, (பல) திக்கில் உள்ளோர்களும் புகழ்ந்து கொண்டாடவும் தகுதி மிக்க (தில்லை நகர் கோபுரத்தே) சிதம்பரத்துத் திருக்கோயிற் கோபுரத்திடத்தே மகிழ்ந்து விளங்கி நிற்கும் பெருமாளே! (மயல் உறவாமோ)