பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/474

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 469 பிரிந்திருந்து அன்பு நிறைந்திருந்த ஞானிகள் சிலம்பையும் பொன்னாற் செய்யப்பட்ட வீரக் கழலையும் அணிந்த (உனது) திருவடிகளைச் சேர விரும்பி வருகின்ற பெரும்பற்றப் புலியூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே! (புகழானது கூறிட அருள்வாயே) 631. (விடுங்கைக்கு ஒத்த) ஏறி நடத்துவதற்கு ஏற்ற எருமைக்கடாவை உடைய யமன் வசத்தே அடங்கிக், கை வசத்திலிருந்த அனேகம் பொருள்களும் (அறலோதியர் விழியாலே அறவே விழுங்கப்பட்டு) கருமணல்போலக் கறுத்த கூந்தலை உடைய பொதுமாதர்களின் கண்களாலே அடியோடு (விழுங்கப்பட்டு) கவரப்பட்டு விரும்பி அடையத் தக்கனவான போகங்களும் . ஆசைகளும், புகழத்தக்கனவான அறிவும் பெருமையும் - வெறும் முழுப் பொய்யாகி - (உயிர் வெளியாய்விடு நாளில்) உயிர் வெளிப்பட்டு போகின்ற அந்த நாளில் - (இறந்து போகின்ற நாளிலே). (அடியேன் உடல் இடுங்கட்டைக்கு இரையாய்) அடியேனுடைய உடலானது (சுடுகாட்டில்) அடுக்கப்படும் விறகுக் கட்டைகளுக்கு உணவாகிக் கிடக்கும்போது, சுற்றத்தார்கள் கோ' என்று கதறக், கிடக்கும் இடத்திற் (பாடையிற்) கட்டிச் சுடுகாட்டுப் ப்ரதேசத்தில் போவதற்கு முன்னே - என் மனமானது - - (இறந்திட்டு) லயம் அடைந்து அதனால் (கதியாயினும் பெறவே) நற்கதி அடையும் பலனைப் பெறவாவது, அல்லது உலகில் இருக்கும் போது நல்ல (மதி) அறிவைப் பெறவாவது - இந்த இரண்டில் தகுந்ததான லாபமான வரத்தை நீ எனக்குக் கொடுப்பதற்கு இசைந்தருள வேண்டும் (ஒப்புக்கொள்ள வேண்டுகின்றேன் - (அல்லது - ஊதியம் நீதர மனதாலே இசைவாயே) லாபத்தை நீ தருவதற்கு (உனது) மனதாலே (திருவுள்ளம்) கொண்டு இசைந்தருளுக.)