பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/476

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 471 கொடுமைக்கு இடமான மராமரம் ஏழுடனே, சுக்கிரீவன் நடுங்கும்படி அவன்ோடு போர்செய்த குரங்காகிய வாலியை அழித்து, கடல் துாள்படும்படி அரக்கர் தலைவனுடைய குலத்தைச் சார்ந்த அரக்கர்கள் எல்லாம் "கோ" என்று அச்சமுற்று ஒலிட, இலங்கை நகருள் அக்கினி பகவான் எழுந்து வேலை செய்ய (தீப்பற்ற)ப், பெருத்த செல்வ மேலிட்டால் உண்டான செருக்கும், வஞ்சகமும் கொண்ட ராவணனுடைய தலைகள் அடியோடு - பிடுங்கப்படும்படி செலுத்தின அம்பைக் கொண்ட மேலோன்ான இராம்பிரான் (திருமால்) அதிக அன்பு கொள்ளத்தக்க நல்ல சிறந்த மருமகனே இயற்றமிழ் ஆதிய வழங்கும் (முத்தமிழ் வழங்கும்) தென்னாட்டுக்கு ஒப்பற்ற கவிராஜன் என வெற்றிச் சின்னங்கள் ஊதும் வீரம் வாய்ந்த பதிகங்களை ஒதிய சிவவேத சிகாமணியாகிய (சம்பந்த) மூர்த்தியே! நூல்வகைகளுக்கெல்லாம் தலைவனே! என்றும் மங்களகரமானவனே! பெரும்பற்றப் புலியூரில் வீற்றிருக்கும் பெருமாளே! (ஊதியம் நீ தர இசைவாயே) 632. தலைமயிர்ச் சுருளின் கீழ் காதோலைகள் அசைய சீரான சங்கின் ஒளிபோல பற்களின் (ஒளியை) வீசிக், குளிர்ந்த கொங்கைகள் மார்பிடத்தே அசைய, கொண்டை என்கின்ற (கறுத்த) மேகமும் - (470 ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) * கொந்தள ஓலை - இந்தப் பாடலிலும் 976 ஆம் பாடலிலும் வரும் 'கொந்தள ஓலை" என்பது கொந்திள ஒலை" என்றிருத்தல் வேண்டும். 'கொந்திள ஒலை - தளிர்க் கொத்தோடு கூடிய இள ஒலை (கொந்து கொத்து. இள ஒலை - குருத்தோலை ஒலை - ஓர் காதணி பனை ஓலைச் சுருள் போன்ற பொன் அணி, செந்தமிழ் wi-300-301.