பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/489

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 485 வேகமாய் வேலாயுதத்தைச் செலுத்தி, (வடகுவடு) மேரு (வாய்விட) கலங்கிக்குலுங்க, தேவர்களும் முநிவர்களும் ஆடிப்புகழ, வேதம்வல்ல புலவர்கள் முழவு குடமுழா, வீணை, (கின்னரி) யாழ்வகை இவைகளின் அமுதகீதம் போன்ற தொனிகளுடன் முறை முறையாக ஒலியை எழுப்பி ஒதிட, ரம்பையாதி தேவமகளிர்கள் தத்தம் கொங்கைகள் கனக்க, ஒன்றுகூடி நடனம் ஆடினவராய் வர, கிரீடமும், கொடியும் விளங்கவே துடிக்கூத்து, குடைக்கூத்து - ஆடி விளங்கிய கந்தவேளே! அரசமரம், மாமரம், தென்னைமரம், அகில், பலாமரம், இலுப்பைமரம், மகிழமரம், அழகுள்ள மூங்கில், அத்திமரம், கமுகமரம், வாழைமரம், இவையெலாம் கலந்து மேகமண்டலம் வரை உயர்ந்த சோலையில் உலவும் குயில்கள், வண்டுகள், மயில்கள், கிளிகள், (கோ எனம்) (கோ என) கோ' என்று ஒலிசெய, பெரிய அமுதநீரைக் கொண்ட குளங்களிலும், கழனிகளிலும், வயல்களிலும், வாளைமீன், கயல்மீன் இவைகள் அடைகின்ற அழகினாலே, அந்தப் பொன்னுலகம் என்று சொல்லும்படியாய் விளங்குகின்ற புலியூரில் (சிதம்பரத்தில்) வீற்றிருக்கும் அழகிய வேலனே! அழகும் ஆசையும் கொண்ட குமரி, தேவதை, தினைப்புனத்திலிருப்பவள், வண்டுகள் குலவும் கூந்தலிற் சேர்ந்துள்ள கடப்ப மாலையை உடைய அரசி, வேத சொரூபம் கொண்டவள், தாமரையன்ன அடிகளையும் கரங்களையும் கொண்டவள், அருமை வாய்ந்த வேடச் சிறுமியாகிய வள்ளி அணைந்த புகழையுங்கொண்டு, சிவந்த உருவங் கொண்ட பாதங்களுடன், (இவுளி தோகை) தோகை இவுளி - கலாபம் கொண்ட குதிரையாம் மயில் மீதேறின திரு ஒலக்கத்துடன் உன்னை (அல்லது நீ) அணைந்த தெய்வயானையின் (தேவசேனையின்) கொங்கையையும் மகிழ்ந்து அவளைச் சேர்ந்த தம்பிரானே! (சிந்தனையை தந்து ஆள்வாய்)