பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/498

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 493 வேதம்வல்ல பிரமனைக் காந்தள் பூப்போன்ற கையினால் தலையின்மேல் குட்டி : # (ஆதி சேடனுடைய) (சதமுடி) நூற்றுக் கணக்கான முடிக்ள் வேதன்னப்பட்டு அசையக், க்ோபித்து அசுரர்களின் மேல் வேலாயுதத்தைச் செலுத்தினவனே! மன்மதனைக் கோபித்து, யானை, புலி இவை தம் தோலை (போர்வையாகவும், உடையாகவும் ஒருசேர அணிபவருடைய (சிவனுடைய) இடது பாகத்திற் பொருந்தினவள், அழகிய சாம்பவி, மாது, உமை பெற்ற குழந்தையே! (நாதத்தோசை) திருச்சிலம்போசை முதலிய நாதங்களை (காண்) கேட்பிப்பதற்குத் துணைபுரியும் தேவே) மூலாதாரக் கனலைத் தூண்டி எழுப்பிப் பிராணவாசி சுழிமுனை நாடி மார்க்கத்திற் சார்வதற்கு (அருள்) (அருள்புரிவாய்ாக்)! (அல்லஅ அருளுகின்ற) தேவருலகத்து மானாம் (தேவசேனை) யையும் (அல்லது, சுரமானை சுரம் தினைக்காட்டிலிருந்த மானை வள்ளிமாதை). ஞானப்பால் போலவும், முப்பழங்களின் தேன் போலவும் இனிய சொரூபம் உடைய ಪಿ.ಸಿ. (தினைக்) காட்டிலும் சேர்ந்து அணைந்தவனே! சிவஞானப் பூமியாகிய (தேன் - தென்) அழகிய (அல்லது தேன் - தேன் போல் இனிய) புலியூரில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே! (விலைமாதர் உறவாமோ) 640. ஜகத்தோர் மெச்சும் எதிரில் விருதாகப் பிடிக்கும் குடை, சூழும் பல்லக்கின்மேல், மகிழ்ச்சி மிக்க இன்பத்துட்னே, பலவகைய ஆபரணங்களுடனே, (தனிதம் பட்டுடையோடு) பட்டுடையோடு - பட்டாலாய ஆடைகளுடனே - (தனிதம்) மேக கர்ச்சனைபோன்ற பலமுள்ள முரசவாத்தியம், ஒலிசெயும் வீணை . "மூலத்தோனைத் தூண்டிடவே. வளிமாதைச் சேர்ந்தணைவாய்' என்பதினின்றும் மூலாதாரத்தில் விளங்கும் விநாயகரை வேண்டி எழுப்ப அவர் உதவியால் வள்ளிமாதை முருகா நீ அணைந்தாய் - என்னும் உட்பொருளும் இங்கு தொனிக்கின்ற தென்பர்.