பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 495 தவளசங்கு (வெண்சங்கு), (தப்பு) பறையுடன் (கிடுகிடு என்னும் பறை, (நடை) ஊர்வலம்வரும் தம்பட்டம் (பறை வகை), (இடோல்) டோல் என்னும் வாத்தியம், இவை பலவற்றின் ஒலி எழ, (சதளம்) ஜனக்கூட்டம் (பெருகிப் பார்க்க), பொன்னாலாய தடிகாரர்கள் (பொன்தடி ஏந்தும் சேவகர்கள் - இவையெலாம் பக்கங்களிற் சூழ்ந்துவர நிறைந்த பூரண கும்பங்களுடனே, பலவித படைகளும், கரகங்களும் சூழ்ந்துவரக், கித (வாத்தியங்கள்) க் செல்வத்துடனும் அழகுடனும் தினந்தோறும் பொருந்திவரும் . (இந்த ஆடம்பரங்கள்) (வெறும்) பிரமையாம் (வெறும்) கோலமாம்; இது நொடிப்பொழுதில் மறைந்துபோகின்ற (பொய் சம்பிரமம் ஆம்: (இந்தப் பொய்வாழ்வுடன்) அலைகின்ற அலைச்சலை விடுதற்கு - தேவர்களுக்கும் காண்பதற்கு அரிதான - உனது இரு திருவடிகளைத் தந்தருளுக. திகுதந்தித் திகுதோ திகுதிகு. திகுர்தஞ் செச் செகசே செககண என்று பேரி வாத்தியம் - (திமிர்தம்) பேரொலி செய, (கற்குவடு) மலைத்திரட்சிகளும், ஏழு கடல்களும் ஒலி எழுப்பிக் குலைந்து போப் அச்சத்துடன் -9յհՆյD (கலங்க), கூட்டமாய்க் கொடுமையுடன் வந்த அசுரர்கள் பொடிபட்டு அழிய வேலாயுதத்தைச் செலுத்தினவனே! (அகரம்) அகர எழுத்துப்போல முதல்வியாய்ப், பச்சை நிறத்தவளாய், ஒளி பொருந்திய ஸ்படிகம், பொன் போன்றவளாய் (உலகை யின்று போகம் அளிக்கும் அருமைச்) செயலினளாய், (அரன்) சிவனுக்கும், (அரி) திருமாலுக்கும், (அயன்) பிரமனுக்கும், தேவிர்களுக்கும் கிட்டாத அருமை வாய்ந்தவளாயுள்ள உமையம்மை அருளிய குழந்தையே! அமுதம் (பொதிந்த) அழகிய மலைபோல்வதான இரண்டு கொங்கைகளையும், சந்திரன் போன்ற முகத்தையும் கொண்ட புகழ் பெற்ற (மான்மகள்) மான். ஈன்ற மகளாம் வள்ளியுடன், அருள்பாலிக்கும் செம்பொன் (அம்பலம்) உள்ள புலியூரில் ഖ്ற்றிருக் கும் பெருமாளே! (இணையடி தருவாயே)