பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 499 புகழ்பெற்று உன்னுடைய திருவடியைப் பணிந்து ஒள்ளிய திருநீற்றை அணிந்து அச் சமயத்தில் ஆனந்தக் (கண்ணிரிற்) (படிந்துண்டு) படிந்து, (அவசம்). பரவசம் (மிஞ்சும்) மேம்படும். (தவசர்) தவசிகளுடைய - தவத்தினருடைய (சந்தம் போலும்) சுகம் போன்ற நிலையில் (திண் புவனி கண்டு) திண்ணிய வலிய இப் பூமியின் நிலையை அறிந்து (புவி வாழ்க்கையின் நிலையாமையை அறிந்து) இன்று - இன்றே. இப்பொழுதே அடிவணங்கும்) உனது திருவடியை வணங்கும்.(செயல் கொள) பணியை மேற்கொள்ள (அம் செம் சீர்) அழகிய செவ்விய சீரான உனது செம் பொன்னாலாய கழல்களை அணிந்த திருவடி ையத் தந்தருளுக. திகுடதிந்திந் தகுடதந்தம்.டிமுட டிண்டென்று ஒலிக்கும் சங்கமும் பல பேரிகளும். (செக கணம்சஞ்) செக சஞ்கணம்-செகசஞ் என்னும் ஒலித்திரளை எழுப்பும் (சல்லிகை) பெரும்பறையும், (பஞ்சம்) ஐவகை இசைக்கருவிகளும் (தோல்கருவி, தொளைக்கருவி, நரப்புக்கருவி, மிடற்றுக் கருவி, கஞ்சக் (வெண்கலத்தாலாய தாள வாத்தியம்), பறைகளும் முழங்குதின்ற போர்க்களத்தில், பூமியும், மலைகளும் இடிபடவும், கடல் வற்றிப்போகவும், தூள்பறக்கவும், அங்கிருந்தவர்களாம் (அசுரர்களின்) கூட்டம் தலை உடைந்தும், (நெருங்கி எதிர்த்துவந்த அசுரர்களின் உடலானது பிணமாகும்படி எதிர்த்துப் பொருதும் அன்று (ஆடும்) போர்புரிந்த செவ்விய ஒளிவேலனே! எல்லா உலகங்களும் சுழலும்படி எங்கும் சுழன்று (வலங்கொண்டு) அங்கு நடனம் செய்கின்ற (கொன்) கோன்-தலைவன், புகழ் விளங்குகின்ற (கவுரிபங்கன்) உமையொரு பாகத்தன்ஆகிய சிவபிராற்கு குருமூர்த்தி என்கின்ற அழகிய பெருமையைப் படைத்து, ஆறுதிரு முகங்களையும் (பொன்ச துலங்கும் திருபதன் அழகிய (சதி):தாள ஒத்துக்களை விளக்கும் (திரு முத்திச் செல்வத்தைத் தரும் (பத்ம்) திருவடிகளையும் உடைய கந்தா-(என்று என்று) எனப் பலமுறை ஒதித் தேவர்கள், (பால்) உன்மீது.