பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தமனிய முத்துச் சதங்கை கிண்கிணி தழுவிய செக்கச் சிவந்த பங்கய சரணமும் வைத்துப் பெரும்ப்ர பந்தம்வி ளம்பு காளப் புலவ னெனத்தத் துவந்த ரந்தெரி தலைவ னெனத்தக் கறஞ்செ யுங்குன புருஷ னெனப்பொற் பதந்த ருஞ்சன னம்பெறாதோ. பொறைய னெனப்பொய்ப் ப்ரபஞ்ச மஞ்சிய துறவ னெனத்திக் கியம்பு கின்றது புதுமை யலச்சிற் பரம்பொ ருந்துகை தந்திடாதோ, குலசயி லத்துப் பிறந்த பெண்கொடி யுலகடை யம்பெற் றவுந்தி t யந்தணி குறைவற முப்பத் திரண்ட றம்புரி கின்றபேதை, குணதரி 4 சக்ரப் ப்ரசண்ட் சங்கரி கணபண ரத்நப் xபுயங்க கங்கணி குவடு குனித்துப் புரஞ்சு டுஞ்சின வஞ்சி நீலி, 0கலப விசித்ரச் சிகண்டி சுந்தரி கடிய விடத்தைப் பொதிந்த கந்தரி கருணை விழிக்கற் பகந்தி கம்பரி யெங்களாயி,

  • காளப் புலவன் (காளம் மேகம் போல) பெருமழைபோலக் கவிகளைச் சொரியவல்ல புலவன்; காளமேகப் புலவர் அருணகிரியார் காலத்திலோ அதற்குச் சில ஆண்டுகள் முன்னரோ இருந்தமையால் காளமேகத்தின் ஆசு கவித்திறம் அருணகிரியார்க்கு நன்கு தெரிந்திருக்கும்: 疆 ன் காளப்புலவன் என்ற போது காளமேகருடைய ஞாபகமும் அருணகிரியார்க்கு இருந்திருக்கும்).

f அந்தணி அந்தணன் என்பதின் பெண்பால் - அபய வரம் புரி உபய கரம் திகழ் அந்தணி வேல்வாங்கு வகுப்பு,

  1. சக்ரப் ப்ரசண்ட சங்கரி - சக்ர தலத்தி த்ரியகூதி" பூதவேதாள வகுப்பு. முக்கோணத் தானத்தாள் திருப்புகழ் 1126 திருப்புகழ் 456, பக்கம்-18-கீழ்க்குறிப்பைப் பார்க்க

X புயங்க கங்கணி. அழல்வாய் கான்றிடு நாகாங்கதை" வேல்வாங்கு வகுப்பு: நாக அங்கதை-பாம்பை அங்கதமாகப்புனைந்தவள். அங்கதம் வாகுவலயம், புயவளை, தோளணி. O தேவியை மயில் என்றது. . இமய மயில் சீர்பாத வகுப்பு: இரண கிரண மடமயில்" - தேவேந்திர வகுப்பு. மேலும் மயிலாப்பூரிலும் மயிலாடுதுறை என்கின்ற மாயூரத்திலும் தேவி (பார்வதி) மயில் ரூபங்கொண்டு சிவபிரானைப் பூசித்தாள்.