பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/532

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 527 விபூதிப் பையிலிருக்கும் விபூதியை யிட்டு விளங்கின (ஒருத்தனார்க்கு) ஒப்பற்ற சிவகோசரியார் என்னும் அந்தணர்க்கு (இறைவனுக்கு அன்பே பிரதானம் என்னும் உண்மை அறிவை நன்கு காட்டின (புனவேடம்) மலைக்கொல்லைக் காட்டு வேடனாம் கண்ணப்பர் தந்த (பச்சிலைக்கும்) பச்சிலைப் பூஜைக்கும், (அவர்) (வாய்க்குள் எச்சிலுக்கும்) வாயில் இருந்து உமிழ்ந்த எச்சிலாம் அபிஷேகத்துக்கும், (வீக்கு) அவர் கட்டியிருந்த செவ்விய (சிலைக்கும்) ് - (அல்லது - அம்பறாத் துாணிப் பைக்கும், வில்லுக்கும்) உகந்து அவரை ஆட்கொண்டருளிய சிவனது செல்வக் குமரனே! (பத்தி) முறைமையுடன் (சித்தி) மோகூடிப் பொருளைக் (காட்டி) உபதேசித்து (அத்தர்) தந்தையாம் சிவபிரானுடைய (சித்தம் மீட்ட) உள்ளத்தை (மீட்ட) மீள்வித்த - வசப்படுத்தின பெருமாளே! (அல்லது) தமது பத்தி - சித்தியான (முதிர்ந்து கூடின) நிலையைக் காட்டி இறைவனது திருவுள்ளத்தைத் தம் பாலாக்கியுள்ள, பக்தர்களுக்கு அருமையாய்க் கிடைத்துள்ள பெருமாளே! (மோகூம் அருள்வாயே)

  • அங்ங்ணமே சிவகோசரியார் மறுநாள் மறைந்திருந்து பார்த்தனர். வழக்கம்போல் இறைச்சி நிவேதனத்துடன் திண்ணனார் வந்தனர். வந்ததும் இறைவன் கண்ணில் ரத்தம் ஒழுக இருப்பதைக் கண்டு ஐயோ" எனப் பதைத்து வீழ்ந்து பதைபதைத்துப் பச்சிலை பலவற்றின் சாற்றினை மருந்தென்று அந்தக் கண்ணில் பிழிந்தார்; ரத்தம் நிற்காததைக் கண்டு "ஊனுக்கு ஊன் இடுக" என்னும் முறைப்படித் தமது கண்ணையே அம்பினால் பெயர்த்தெடுத்து இறைவனார் கண்ணில் அப்பினார். ரத்தப் பெருக்கு நின்றது. கண்ணப்பர் தோள்கள் கொட்டிக் கூத்தாடினார். அப்போது இறைவனுடைய மற்றைக் கண்ணில் ரத்தம் பாயக் கண்டார். இதற்கு நான் அஞ்சேன் என்று தமது மற்றக் கண்ணையும் பெயர்த்தெடுத்து அப்ப நினைத்து இடம் தெரிய வேண்டி, இறைவனது திருக்கண்ணில் தமது இடது காலை ஊன்றி, கண்ணைப் பறிக்க அம்பை நாட்டினார். இறைவன் அச் செயல் கண்டு தரிக்காது - "நில்லு கண்ணப்ப, நில்லு கண்ணப்ப" என் அன்புடைத் தோன்றல் நில்லு கண்ணப்ப" - என்று சிவலிங்கத்தினின்றும் தோன்றிய தமது கையால் தடுத்துக் கண்ணப்பருக்குச் சிவகதி அளித்தனர். இந்நிகழ்ச்சியைக்

(தொடர்ச்சி - பக்கம் 528 பார்க்க.)