பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 47 பொன்னாலாய முத்துச் சதங்கை (கிண்கிணி) இவைகளைத் தழுவி மிகச் சிவந்த தாமரை மலர் போன்ற திருவடியையும் வைத்துப் பெரிய பாமாலைகளைப் பாட வல்ல காளமேகம் (கருமேகம்) போன்ற. புலவன் இவன் என்று சொல்லும்படியும், உண்மை ஞானம் பெற்ற தலைவன் இவன் என்று கூறும்படியும், தக்க (சரியான) தருமங்களைச் செய்யும் குணத்தை உடைய (சற்) புருஷன் இவனென்று (உலகோர்) கூறும்படியும் மேலான பதத்தை (பதவியை நிலையை)த் தருகின்றதான சனனம் (பிறப்பை) (இந்த ஆன்மா) பெறாதோ (நான் பெறேனோ) பொறுமை உடையவன் இவன் என்றும், பொய் உலகத்தைக் கண்டு பயந்த துறவி இவன் என்றும் திக்குகளில் உள்ளோர் (உலகோர்) சொல்வது ஒர் அதிசயம் அன்று; அறிவுக்கு மேம்பட்ட பெருநிலையைச் சேர்ந்து பொருந்தும் பேற்றை (நினது திருவருள்) தந்து அருளாதோ! சிறந்த மலையாம் (இமயத்தில்) பிறந்த பெண்கொடி, உலகு எல்லாவற்றையும் ஈன்ற திருவயிற்றை உடைய அழகிய தட்பம் உடையாள் குளிர்ந்தகுணம் உடையாள்), குறைவு இல்லாத வகையில் முப்பத்திரண்டு அறங்களைச் செய்து வந்த தேவி. நற்குணம் உடையாள், சக்ரம் (மந்திர யந்திரத்தில்) வீரத்துடன் விளங்கும் சங்கரி, கூட்டமான படங்களை உடையதும், ரத்ன (மணி) கொண்டதுமான பாம்பைக் கங்கணமாக (கைவளையாக) அணிந்தவள், மேரு மலையை வளைத்துத் திரிபுரத்தை எரித்த கோபங்கொண்ட வஞ்சி (வஞ்சிக்கொடி போன்ற தேவி), நீல நிறமுடையவள், கலப விசித்ரச் சிகண்டி (விசித்ரக் கலபச் சிகண்டி, விசித்திரமான தோகையைக் கொண்ட மயில் அனையாள்) (அல்லது மயில்ரூபம் கொண்டவள்), சுந்தரி, பொல்லாத ஷத்தை அடக்கி வைத்துள்ள கழுத்தை உடையவள், கருணை நிறைந்த கண்ணினள், கற்பகம் (போன்று வேண்டுவார்க்கு வேண்டுவதை அளிப்புவள்), திக்கே (அம்பரமாக) ஆடையாக உடையவள் (நிர்வாணி), எங்கள் ஆயி (தாய்)