பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/548

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்பரம்) திருப்புகழ் உரை 543 653 - I. மனமே! உனக்கு உறுதி தரக்கூடிய மொழிகளைச் சொல்லுவேன்; என்னுடைய சமீ பத்தில் வா! நான் சொல்லும் சொற்படி தவறாமல் நடப்பாயாக! மயில்வாகனம் ஏறும் தெய்வம்; அடியவர்களுக்கெல்லாம் அரசர் மனம் மாயை என்பன இல்லாத (அல்லது மன மயக்கம் இல்லாத) சுக சொரூப அறிவுள்ள குழந்தை (நினைவேது உனக்கு வருத்தம் ஏது உனக்கு அல்லது உன் நினைவுக்கு (ஏது) காரணமாயிருப்பவன் - அல்லது உன் எண்ணம் எதுவோ அதையும், அமரர் லோகம் சிவலோகம் . வானோர் உலகு சிவலோகம் இவைதமையும் அளித்து, (மலம்) (ஆணவம், கன்மம், மாயை என்னும்) மும் மலங்களின் நிலைத்துள்ள வேர்களை அறுக்க வல்ல ஒளியோன். சங்கநிதி, பதுமநிதி (அனையவன்), கற்பகக்கா (அனையவன்); நமக்கு உறுதி (நிலைப் பொருள்) அவனே, (பரப்பிரமம்) . முழுமுதற் கடவுள் அவனே, (நிழலாளி) நீதிமான் (அத்தகைய பெருமானை நீ) வழிபட்டு வருவாயாக (இனம் ஒது ஒருத்தி) (நமது உண்மைச் சுற்றம்) என்று சொல்லக்கூடிய ஒருத்தி (ஒப்பற்றவள்), அழகு உருவம் உடையவள், நலமும், அழகும், கொண்ட வேதங்களுக்கு எட்டாத (என்றும்) இளையவள், ஒரு விதத்திலும் ஒப்பில்லாதவள், (உடையற்றவள்) திகம்பரி. என்னைப் பெற்றெடுத்த (ஞானக் குழந்தையாய் காத்தருளிய) புகழ் நிறைந்த கலியாணி - அத்தகைய தேவியின் பக்கத்தில் உறைகின்ற (தேவியைப் பாகமாகக் கொண்ட) கொன்றையணிந்த அப்பனுடைய சிவபிரானுடைய குருமூர்த்தியே!