பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) - திருப்புகழ் உரை 49 தன்னைத் தியானிக்கின்ற பக்தர்களிடத்தே இரக்கம் கொண்டுள்ள அம்பிகை, வேதம் துதிக்கும் முக்கண்ணி, கவுரியின் திருக்கோயிலில் (காமாட்சியம்மை கோயிலில்) வீற்றிருக்கும் தம்பிரானே! தேவேந்திரர்களின் தம்பிரானே! (சிற்பரம் பொருந்துகை தந்திடாதோ) 465. இதத்துடன் (இன்பத்துடன்) பற்று பற்றுகின்ற இதழ் வாயிதழின் துப்பு - நுகர்ச்சி (வாயூலை அனுபவித்தலை), அற்று-நீங்கி, இருள் இருண்ட, ( துன்பம் தரும்) பொக்கக் கருத்து - பொய்யான (வஞ்சகமான) எண்ணங்களில் , இட்டத் தியக்கத்தில் (இஷ்டம் வைத்ததனால்) வரும் சஞ்சலங்களால் (மயக்க அறிவால்), தியக்கு உற்று (சஞ்சலம் அடைந்து மயக்கம் அடைந்து) நான் சுழற்சி உறாமல். எலும்பு, சுக்கிலம் (இந்திரியம்) , கத்தம் (மலச்சேறு) , தடி (தசை - மாமிசம்) - தொக்கு - தோல் - (இவைகூடிய), கடத்தை உடம்பைப் பெற்றெடுத்து - அடைந்துகொண்டு, பற்று அடுத்த-பற்று (பாசம்) சேர்ந்துள்ள தற்பத்து - பாவநிலையில் - பாவத்தில் உழலாதே - அலைச்சல் உறாமல் - (அல்லது பற்று அடுத்து அற்பத்து உழலாதே - பாசத்தைக்கொண்டு அற்பமான செயல்களில் அலைச்சல் உறாமல்). சுத-சுத்த சுத்தமான (தத் தச் சதத்து) தத்தத்_சத்தத்து - அந்த அந்த ச்த்தத்துக்கும், அத்தம் - அர்த்தத்தை (விசாரிக்கும்) பதத்தர்க்கு - பத ஆராய்ச்சி செய்வோர்க்கு, உற்றவற்றை உள்ளதை, சொல் - எடுத்துச் சொல்லும், துவக்கில்பட்டு -கட்டிலே (தொடர்- ) சிக்குண்டு, அதனால் அவஸ்தைப்பட்டு (வேதனைப் * பட்டு) சோர்வு அடையர்மல்-(சொல் ஆராய்ச்சியாற் சோர்வுறாமல்) துணைச் செப்பத்து - செப்பத்து துணை (செப்பம்) செவ்வையான தன்மை (துணை) கூடிய-அலர்க் கொத்து - பூங்கொத்துக்களும் உற்பலம் (நீலோற்பல மலர்) செச்சை (வெட்சிப்பூ) இவை தம்மால் ஆய தொடைப் பத்தி (மாலை வரிசைகளும்), கடப்பம், (கடம்பும்) கொண்ட பொற்கழல்அழகிய உனது திருவடிகளைச் செப்பி (புகழ்ந்து கூறித்) தொழ மாட்டேனோ!