பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளிகரம்) திருப்புகழ் உரை 25 முநிவர்க்கு முநிவனே! மெய்யர்க்கு மெய்யனே! அழகிய சிவந்த உனது திருவ்டியைத் தந்தருளுக வள்ளலே! (அல்லது வள்ளல் தன்மை வண்மைக் குணம் வாய்ந்த) புள்ளி (நவ்வி) மான் (லகூழ்மி) ஈன்ற வள்ளிக் கிளியின் மொ ழிகளைக் கேட்டு மோகம் கொண்ட ஐயனே! வயல்களில் (வையில்) புல்லில் வெள்ளைச் சங்குகள் ஏற மெதுவாக உழவர்கள் பறித்தெடுக்கும் நெல்லின் மிகுதி (பெருக்கு) உள்ள வெள்ளி நகரில் வீற்றிருக்கும் செல்வனே! விரும்புதற்குரிய மலை வில்லி மேருமலையை வில்லாக வளைத்த சிவபிரானுடைய சொல்லை (பிரணவமொழியின் பொருளை அவருக்கு குருவாயிருந்து) வெற்றியுடன் மொழியவல்ல பெருமாளே! (செய்ய கழல் தாராய்) 665. (கொங்கைமேல்) பத்திக்கிற்றை (எழுதுதல்) செய்தால் எழுதினால் நெகிழ்ந்து தளர்பவர்கள், கீழ் மக்கள் - ஆகிய பொது மகளிருடைய, தொய்யும். இளைத்து உள்ள, (ஐய).நுண்ணிய இடையாலும். (24 ஆம் பக்கம் கீழ்க்குறிப்புத் தொடர்ச்சி) | சையவில்லி. மலையாகிய வில்லை உடையவர். X தொய்யில் ...பத்திக்கிற்று மகளிர் கொங்கையில் சந்தனக் குழம்பால் எழுதும் கோலம் (பிங்கலம்); தொய்யில் பொறித்த கணங்கெதி ரிளமுலை. மதுரைக் காஞ்சி 416. கரும்பையும் வல்லியையும் தோளில் எழுதித் தொய்யிலை முலைமேல் எழுதுவது. "கரும்பும் வல்லியும் பெருந்தோள் எழுதி சிலப்பதி.2.29 திருமுலைத் தடத்திடைத் தொய்யில்..2 69 O நொய்யர்.தளருந் தன்மை யுடையோர்.