பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெள்ளிகரம்) திருப்புகழ் உரை 27 எழுந்து பாய்ந்து, வள்ளைக்கொடி போன்ற காதைத் தள்ளி-காது வரைக்கும் பாய்ந்து தள்ளி, (உள்ளல்) மனத்தில் நினைத்துள்ள எண்ணத்தைச் சொல்லும்) வெளிப்படுத்தும் திருட்டு விழியாலும். (மைய) கருநிறம் உடையதும், செம்மை வாய்ந்த (மெளவல்) காட்டு மல்லிகை, முல்லை நிறைந்துள்ளதுமான நல்ல கூந்தலாலும் காம இச்சைகொள்ள (என்னை) எள்ளல் செய்யும். இகழ்கின்ற (வல்லி) பெண்களின் பேச்சுக்கு மகிழ்ச்சி கொள்வேனோ! - கொள்ளலாகாது என்றபடி செந்நிறத்தவனே! துய்யனே! (அல்லது) செவ்விய, பரிசுத்தமான, புள்ளிமான் (லகூழ்மியின்) (செல்வி) குமாரி, (கல்வரையில்) கல் நிறைந்த வள்ளி மலையில் தினைப் புனத்தில் இருந்த தெய்வ வள்ளிமேல் மோகம் கொண்ட (அல்லது தெய்வ வள்ளி மோகங்கொண்ட) செல்வ பிள்ளையான முருகனே! மெய்யர்க்கு மெய்யனே! பொய்யர்க்குப் பொய்யனே! (வெள்ளை) கள்ளம் இல்லாதவனே (அல்லது, வேங்கை! மரங்கள் உள்ள) வெள்ளி நகரில் வாழும் செல்வனே! விரும்பத்தக்க மலை வில்லி (சிவபிரானது) சொல்லை -பிரணவ மொழியின் பொருளை (அல்லது இறையனார் அகப்பொருளின் பொருளை) இன்னதென விளக்கி வெற்றியைக் காட்டின (அல்லது - சிவபிரான் சொல்லைக் கடந்து பிரமனைச் சிறையினின்றும் விடேன் என்று தன் திரத்தைக் காட்டின) பெருமாளே! (வல்லி சொல்லை மகிழ்வேனோ)