பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/606

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்சிபுரம்) திருப்புகழ் உரை 47 ஒருவருக் கொருவர் (சக்களமையில்) சக்களமைப் பகைமையில் போட்டிப் பகைமையில் - (சருவவிட்டு) - போராட விட்டு, அவர்கள் (உருவு பத்திரம் எடுத்து) வாளை உருவி எடுத்து அரையிலே மல் யுத்தம் செய்யும்படி வைத்து, உயிர் பிழைப்பதே - யோசித்துப் பார்க்கில் (உச்சிதம் என) . தக்கது. மேல் என்னும்படிச் செய்கின்ற (மானார்) பொதுமகளிர்- -- தருகின்ற காம இச்சை மயக்கத்தினால் - தவ வழிக்கு மாறுபட்டவனாகி - புறம்பாகி - சரியை மார்க்கத்திலும் . கிரியை மார்க்கத்திலும் செய்வதற்குள்ள தவ க்கம் இல்லாதுபோய், எனது கையிலிருந்த பொருள் வீணாகச் செலவழித்து (ஊரில் உள்ள) யாவரும் எனை நெருங்கி இகழ (இழித்துப் பேசத்) திரிகின்ற என்னுடைய. எல்லாவித துக்கங்களும் நீங்கவும், எல்லாவித நற்குணங்களும் கூடவும், பூமியில் நான் புகழை அடையவும் புகழ் விளங்கி வாழவும் வேண்டிய (தகைமை) யோக்யதையை மதிப்பைப் பெற்று, உன்னுடைய அழகிய திருவடிகளை எப்போதும் (நட்புடன்) அன்புடன் (நான்) நினைக்கும். படியாக (உனது) திருவருளைத் தந்தருளுக; தங்களுடைய குரு (பிரகஸ்பதி) சொன்ன சொற்படி தவநெறியில் இருந்த (புலவரை) தேவர்களைச் சிறையில் வைத்து மிகவும் (உக்கிரம்) கொடுமை செய்துவந்த அரக்கர்களாகிய, முற்றிலும் கொடிய கெட்ட குணத்து வீணர்களை முன்பு - அவர்கள் செய்த குற்றங்களுக்காக அறுத்தெறிந்த வேலாயுதனே! குயில்போன்ற மொழியையும், கயல்மீன் போன்ற கண்களையும், பவளம் போன்ற வாயிதழையும் வில்போன்ற நெற்றியையும், சந்திரன் போன்ற முகத்தையும், புன்னகை. யையும், கருமேகம் போன்ற கூந்தலையும், (கிரிதனம்) மலை. போன்ற கொங்கைகளையும், கொடிபோன்ற இடையையும், (பிடி) பெண் யானையின் நடைபோன்ற நடையையும், கொண்டிருந்த குறமகள் - குறமகளாம் லக்ஷ்மியை (கிராத லக்ஷ்மியை) வள்ளியை அணைபவனே!