உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்சிபுரம் திருப்புகழ் உரை 55 ஒலிக்கின்ற கடலில் (எழுந்த விஷத்தைக் கழுத்தில் நிறுத்திவைத்துப் புலியின்தோலை உடுத்து, பாம்பாகிய ஆபரணத்தைப் பூண்டு, விளக்கம் உற நடனம் செய்பவராகிய சிவபிரான் முன்பு ஈன்றளித்த உத்தம வேளே! பொருந்திய அரிய வேதங்களின் பொருள்களை நாள்தோறும் ஆய்ந்துரைத்து, இப் பூமியில் அழகிய தமது கடமைகளைச் செய்யும் முநிவர்க்கு இனிய (பெருமாளே!) (கரபுரம்) திருவிரிஞ்சைப் பதியில் ஆறுமுகப் பெருமாளே! (அசனம் ஒரு பிடிப்படையாதே திரிவேனோ) 676. பொருந்தியுள்ள (மண், நீர், தி, காற்று, வான்) என்னும் ஐந்து பூதங்களுக்குச் சொந்தமாகாத வண்ணம் இது (இவ்வுடல்) மலம் (அழுக்கு) என்று உதறித்தள்ள அறியாமல். மயக்கம் கொண்ட இந்த வாழ்வு போதும் என்று எந்த தினத்திலும் அத்தகைய எண்ண்ம் நன்றாக மனத்தில் தோன்றுதல் இல்லாத அடியேனும் உள்ளம் உருகி அன்போடும் உன்னை நினைந்து நாளும் (நாளும் உன்னை நினைந்து) (உலகம்) பிரபஞ்ச விஷயங்கள் என்று பேசும் பேச்சே பேச அறியாத இவ் வடிவினதாம் இது என்பது இல்லாத நிலை வந்துகூட (நிலையை நான் அடைவதற்கு) உனது இரண்டு பரிசுத்தமான திருவடிகளைத் தந்தருளுக. திருமாலும், பிரமனும் தேடுதற்கு அரியவரான தம்பிரான்ாம் சிவபெருமானும் உனது திருவடிகளிற் பணிந்து பேசிக், கடைசியாக - (அந்த பிரணவப் பொருளை எனக்கு உபதேசித்து) அருளுக என்று கேட்டபோது (பொருளிதென்று) இதுதான் பொருளென்று அவர் உணர்ந்து கொள்ளும்படி உபதேசித் தருளிய குழந்தையே! (அல்லது வீரனே!) (அங்ங்ணம்) அந்த ஆதி சிவனுக்கும் (குருநாதன் ஆனவனே) குருநாதனே!