பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/634

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாக்கம்.) திருப்புகழ் உரை 75 683. (பாறு - பருந்து) பருந்துகளின் கூட்டங்கள் தின்று ஏப்பமிடும் வயிறு நிறைதற்கு இடமான இந்த (உடற்) கூட்டை (நோக்கி) விரும்பிச் சுமந்துகொண்டு ஊர்கள் தோறும் . (காட்சிகளைப்) பார்த்தும், திரிந்தும், அலைச்சல் உற்றும், செல்வத்துக்கு வழியைத் தெரிந்தும் (அதன்பொருட்டு) (ஏக்கற்று) இளைத்து. வாடி (நின்று நின்று) அங்கங்கு நின்று தளராமல் (நான் முன்வருவதற்கு) வேறாக மாறாக நிற்கின்ற ஐம்புலன்களையும் ಫಿಷಿ அப்புறப்படுத்திப் பிரித்து ஒருமைப்பட்ட மனத்தினனாய் - உன்னைப் புகழ்ந்துகொண்டு (கீர்த்தித்து) உன் கீர்த்தியையே பாடிப்பாடி உனது திருவடிகளை அடியேனும். விரும்பி (உள்ளம் உன்பால்) கலந்திருந்து (ஈட்டை) வருத்தங்களை - துன்பங்களைக் கடந்து நின்ற மோகூ! வீட்டிற் புகுந்து இருந்து மகிழ்வேனோ! உரைமாற்றுக் கடந்த பொன் விளங்கும் (நாந்தகம் என்னும்) வாளும், (சுதரிசனம் என்னும்) சக்கர்மும் தெரிந்து பொருந்த அமைந்து (பாஞ்ச சன்னியம் என்னும்) சங்கமும், (தடி) கெளமோ என்னும் தண்டமும் கதையும், (சாபம்) கேள்தண்டம் என்னும் வில்லும். (மால்) அழகிய (பொற்கலம்) பொன் ஆபரணங்களும் (துலங்க) விளங்க் (நாட்டு) நிலையாக வைத்துள்ள (அச்சுதன்) 鸞 பணிந்து நீளும் (கைத்தலங்கள்) கைகள் என்று சொல்லும்படி (கைகள்போல உள்ள) அலைகள் மோ துகின் ற பால் என்று சொல்லும்படியான இடம் (திருப்பாற்கடலில்) இடம் கொண்டு வேல்போலக் கூரிய கண்ணையும் கோபத்தையும் கொண்ட பாயான - சேடன் என்னும் ப்ாம்பண்ையில் துயில்கொண்டவனான திருமாலின் மருகனே! (பாக்கு) கமுகமரத்துப் பாக்கையும், கரும்புகளையும் கெண்டை மீன் தாக்கிவிட்டுத் தடாகத்திற் படிகின்ற பாக்கம் என்னும் தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே! (வீட்டிற் புகுந்திருந்து மகிழ்வேனோ)