பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/656

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமயிலை திருப்புகழ் உரை 97 (திகழுற்றிடு) விளக்கம் கொண்ட யோகத்திலும் தவத்திலும் மிக்க விசேடமடைந்த மகா தவசிகளின் (இதயத்திடமே) நெஞ்சம் என்னும் இடத்திலேயே பொருந்தி விளங்கும் பெருமாள்ே! (கதிபெற்று இடரானவையை ஒழிவேனோ) 692. பொருந்திய தேவர்களில் (அதிகன்) மேம்பட்டவனான இந்திரன், பிரமன், திருமால் ஆதிய இவர்கள் அச்சங் கொள்ளும்படி வருகின்றது (அதிகாளம்) பெருத்த விஷம் அதனை - அந்த விஷத்தை - அதகரண விதன - கரண விதன அத மனோதுக்கத்தை ஹதம் செய்பவனே! பரிபூரணம் அமை அன்னவர் கரண - சிந்தை நிறைவு - சாந்தம் அமைந்தவர்கள் மனத்தில் இருப்பவனே! சகலத்துக்கும் ஈசனே! (நிமிர அருள் சரணம்). நிமிர சரணம் அருள் - இத்தாழ்வு நீங்கி நாங்கள் உய்ந்து உயர்ச்சிபெற உனது திருவடி துணை செய்யவேண்டும், (நிபிடம்) நெருங்கி வருகின்றது - (அது) அந்த விஷம் (என) என்று (தேவர்கள்) முறையிட, (உன நிமிர) - உன்னநிமிர - நினைக்கின்ற அவ்வளவு பரப்பிலே - நினைக்கு மளவிலே - நினைத்தவுடனே, (சமிரமய) சமீரன்மய வாயுவின் தன்மையில் வாயு வேகத்திலே (நியமாய) (சரணம் அடைந்தவர்களைக் காப்பதே) கடமையாக - முறைமையாக - நிமிஷநேரத்தில் (அந்த விஷத்தை) உ(ண்)ண வல்ல - உண்டருளின -- சிவனுடைய (சுதவர) வரசுத சிரேஷ்டமான குமரனே (நினது பதவிதர) உனது குகசாயுஜ்ய (பதவியை) நிலையைத்தர வந்தருளுவாயாக (சமரச அமர சுர) ஒற்றுமையான பெருந்தன்மை உடைய தேவர்களுக்கு (இதர பர அசுர) பகைவராகிய கீழான அசுரர்மேல் (சரத விரத அயில்) உண்மையான ஆக்நா சத்தியாகிய வேலைச் செலுத்தியவனே!