பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/668

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|திருமயிலை திருப்புகழ் உரை 109 (அளகை) அளகாபுரி - குபேர நகரத்துச் செல்வம் கொண்ட வணிகர் குலத்திலே (பிறந்த) பூம்பாவை என்னும் பெண்ணின் (இறந்த) உயிரை மீளும்படி அழைக்கவேண்டி (இறைவன்) திருவருளைப் பரவின பதிகத்தைச் சொன்ன குமரேசனே! ருமைச் செயல்கள் கொண்டிருந்த (கிரெளஞ்ச) கிரியைத் தூளாக்கி, அசுரர்களை வேரறுத்து, தேவர் ஊரைப் (பொன்னுலகை) வாழவைத்த பெருமாளே! (மலரணையில் நீயணைக்க வரவேணும்) 698. கடுமையான (வேகம்) கோபம் குறையாத சங்கற்பங்களை உடைய வஞ்சகர்கள், (ஆபாதர்) கீழானோர் (தீயர்), கலகத்தையே செய்கின்ற பாழ்ான மூடர்கள் - (தி) வினையே விரும்புவோர். வஞ்சனை கொண்ட இழிந்தோர், இத்தன்மையோருடைய நல்லது ஆகாத முறைகளை விரும்பியே, பெரிய வலியுள்ள *(விகாரமே) அவலட்சணங்களையே பேசி, நன்னெறியைப் போற்றாத கொடியவனாகிய (நான்) எதையும் ஆராய்ந்து அறியாமல், (காமம்) ஆசைக் கூட்டங்களே மூடியுள்ள இந்தக் குடிசையாகிய உடலில் இருந்து கொண்டே தினந்தோறும் அழிவுறாமல். * விளங்கும் மயில்மீது (உனது) ஆறுமுகமும், வேலும், (ஈராறு) பன்னிரண்டு குவளை மலர்மாலை அணிந்த (வாகும்) தோள்களும் அடியேன் நேராக எதிரே காணும்படி வருவாயே. (படியினோடு) பூமியோடு, பெரிய மேருமலை அதிரும்படியாகச் செலுத்தி, ஆதிசேடனுடைய LIČITПГ மகுடங்கள் அசைவுறவும், பெரிய மலைகளை மோதி.

  • விகாரம்: காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், இடும்பு, அசூயை என எண் வகைப்பட்ட துர்க்குணம்.