உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கலைநெ கிழ்க்கவு. மயல்வி ளைக்கவு நயங்கொண் டங்கி ருந்தே குனுகி யிட்டுள பொருள்ப றித்தற முனிந்தங் கொன்று கண்டே கலக மிட்டவ ரகல டித்தபின் வரும்பங் கங்கு ணங்கோர் புதியபே ருடனே. கதைகள் செப்பவும் வலச மர்த்திகள் குணங்கள்ை டுந்து ளங்கா மனித னிற்சிறு பொழுது முற்றுற நினைந்துங் கண்டு கந்தே கடிம லர்ப்பத மனுகு தற்கறி விலன் பொங்கும்பெ ரும்பா தகனையா ளுவையோ, *சிலைத னைக்கொடு மிகஅ டித்திட மனந்தந் தந்tத ண#ந்தா மரைமலர்ப்பிர மனைந டுத்தலை யரிந்துங் கொண்டி ரந்தே Xதிரிபு ரத்தெரி புகந கைத்தருள் சிவன்பங் கங்கி ருந்தா எாருளுமா முருகா.

  • அருச்சுனனுடைய வில்லால் சிவன் அடிபட்டது:

தவஞ் செய்துகொண்டிருந்த அருச்சுனனைக் கொல்ல துரியோதனனுடைய ஏவலின்படி மூகாசுரன் என்ற அசுரன் பன்றி ரூபமாய் அருச்சுனனிடம் வந்தான். அப்போது சிவபிரான் வேடனாக வந்து பாணம் செலுத்தி அந்தப் பன்றியைக் கொன்றனர். அருச்சுனனும் அந்தப் பன்றியின்மீது ஒரு அம்பைச் செலுத்தினான். முன்னதாக ஒருவர் அம்பு விட்டிருக்கும்போது நீ ஒரு அம்பு செலுத்தினது சரியன்று என்று வேடனுடன் வந்தவர்கள் உரைக்க, அதனால் கலாம் ஏற்பட்டு விஜயனுக்கும் வேடனுக்கும் வில் யுத்தமும் மல் யுத்தமும் ஏற்பட அருச்சுனனுடைய வில் முறிபட்டது. முறிபட்ட வில்லால் அருச்சுனன் வேடனை முடிமீது அடித்தான், அந்த அடி பிரமன், திருமால் முதலிய யாவர்மீதும் பட்டது. மற்போரில் விஜயனை வேடன் தனது பத மலரால் உந்தி விண்ணில் எறிந்தான். கீழே விழும் அருச்சுனனுக்கு இறைவன் காட்சி தர அவன் வணங்கி நின்றான்; இறைவன் அருச்சுனனுக்குப் பாசுபதாஸ்திரம் முதலிய தந்து மறைந்தார். "நின்னுடன் அமர்செய்து நின்வில் நாணறுத் தந்நெடு வில்லினால் அடியும் உண்டனன்" - வில்லி பாரதம். அருச்சுனன் தவம் - 27. (தொடர்ச்சி பக்கம் 129 பார்க்க)