உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பிறத்தற்சுற் றமுற்றுற்றிட் டழைத்துத்தொக் கறக்கத்துப் பிறப்புப்பற் றறச்செச்சைக் கழல்தாராய், பொருப்புக்கர்ப் புரக்கச்சுத் தனப்பொற்புத் திணைப்பச்சைப் புணக்கொச்சைக் குறத்தத்தைக் கினியோனே. புரத்தைச்சுட் டெரித்துப்பற் றலர்க்குப்பொற் பதத்துய்ப்பைப் புணர்த்தப் fபித் தனைக்கற்பித் தருள்வோனே செருக்கக் # குக் கரைக்குத்திச் செருப்புக்குப் பிடித்தெற்றிச் சினத்திட்டுச் சிதைத்திட்டுப் பொரும்வீரா. திருத்தத்திற் புகற்சுத்தத் தமிழ்ச்செப்புத் த்ரயச்சித்ரத் திருக்கச்சிப் பதிச்சொக்கப் பெருமாளே. (19) "பற்றலர்க்குப் பொற்பதத் துய்ப்பைப் புணர்த்தியது. திரிபுரம் எரித்த வரலாற்றைப் பாடல் 285-பக்கம் 206. பார்க்க: திரிபுரம் எரிபட்ட பொழுது சிவ வழிபாட்டால் மாளாது பிழைத்த மூவரில் . இருவர் சிவபிரானது திருக்கோயில் காவலாளரானார்கள். பின் ஒருவன் சிவபிரானது நடனத்தின்போது முழவு வாத்தியம் முழக்கும் பேற்றினை அடைந்தான். 'மூ எயில் செற்ற ஞான்று உய்ந்த மூவரில் இருவர் நின் திருக் கோயிலின் வாய்தல் காவலாளரென் றேவிய பின்னை ஒருவநீ களிகா டரங்காக, மானை நோக்கியோர் மாநடம் மகிழ மணிமுழா முழக்க அருள் செய்த தேவதேவநின் திருவடி யடைந்தேன் செழும் பொழில் திருப்புன் கூருளானே" -சுந்தரர் - 7-55-8 t பித்தன் - சிவபிரான் - பித்தா பிறைசூடி" -சம்பந்தர் - 1-89-3 சுந்தரர் -1-1-1

  1. குக்கர் - (நாய்போல) மிக இழிந்தோர் - குக்கன்-நாய்) (குக்கல்-நாய்) "குடிமையில் கடமைபட்ட குக்களில் பிறப்பர்"

தொண்டரடிப்பொடியாழ்வார் - திருமாலை 39.