உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/768

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தேவனுர்) திருப்புகழ் உரை 209 (கோ அதா) மேன்மையாக - சிறப்பாக, மறையோர் வேதங்களை ஒதும் (ஒதம்) (ஓசை) வெள்ளமும் (அல்லது மோதம் - மகிழ்ச்சியும்), திருவிழாக்களின் ஒலியும் கோடிக் கணக்கான ஆகமங்களின் பேரொலியும் மேம்பட்டு மிக்கு எழுகின்ற திருக்கோவலூர் என்னும் பெரிய நகரில் வீற்றிருக்கின்ற வீரனே! வேல் என்கின்ற கூரிய ஆயுதத்தை உடையவனே! கோதை யானையினோடு மாது தேவசேனையுடன் (அல்லது) கோதை (வள்ளி), (யானை) தேவசேனை இவர்களோடு) வீற்றிருக்கும் பெருமாளே! (மாலறிவே அதிலேயுற லொழிவேனோ) தேவனுார். 739. (ஆறும் ஆறும்) பன்னிரண்டும், (அஞ்சும் அஞ்சும்) பத்தும், (ஆறும் ஆறும்) பன்னிரண்டும், (அஞ்சும் அஞ்சும்) பத்தும், (ஆறும் ஆறும்) பன்னிரண்டும், (அஞ்சும் அஞ்சும்) பத்தும், (அறு நாலும்) இருபத்து நான்கும் ஆறும் ஆய (12 + 10 + 12 + 10 + 12 + 10 + 24 + 6) தொண்ணுாற்று ஆறு ஆன (சஞ்சலங்கள்) (துன்பங்களுக்குக் காரணமான) தத்துவங்களுக்கும் வேறாக விளங்குகின்றதும், வேதம், ஆகமம் இவைகளைக் கடந்ததும், உபதேச கலையாகிய (ஈறு) சித்தாந்தமே சொல்லுதற்கு அரியதான பெரிய தெய்வ நிலையா யிருந்ததுமான (நன்றி) நன்மைப் பொருளை, (ஏது) மூலகாரணம் வேறு சொல்லுதற்கு இல்லாமல் ஒப்பற்ற தானாகவே நின்று. | எல்லாமாய் விளங்கி, மனங்கடந்ததான மோன இன்ப வீட்டை அடைந்து (ஒருங்கி மனம் ஒருமைப்பட்டு ஒடுங்கி நான்) எனது ஆசைகளெல்லாம் அடங்கும். படியான (பாக்கிய நிலையை) என்று பெறுவேனோ!