பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/793

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை உணர்விலி செபமுத லொன்று தானிலி நிறையிலி முறையிலி யன்பு தானிலி உயர்விலி யெனினுமெ னெஞ்சு தா னினை வழியாமுன். ஒரு திரு t மரகத துங்க மாமிசை யறுமுக மொளிவிட வந்து நான்மறை யுபநிட மதனைவிளங்க நீயருள் புரிவாயே புணரியில் விரவி யெழுந்த + விலகிய புரிசை யிலங்கை வாழ்பதி பொலமணி மகுட சிரங்கள் தர்மொரு பதுமாறிப். புவியிடை யுருள முனிந்து கூர்கனை யுறுசிலை வளைய வலிந்து நாடிய புயலதி விறலரி விண்டு மால்திரு மருகோனே, அணிதரு கயிலை நடுங்க வோXரெழு குலகிரி யடைய இடிந்து துாளெழ அலையெறி யுததி குழம்ப வேல்விடு முருகோனே. O அமலைமு னரிய தவஞ்செய் பாடல வளநகர் மருவி யமர்ந்த தேசிக அறுமுக குறமக ளன்ப மாதவர் பெருமாளே. (1)

  • நினைவு அழியாமுன் - இறந்து படுமுன் நினைவு அழிதல் "புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி அறிவழிந்திட்டு" சம்பந்தர் 1130-1. 'ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும் போதுணர மாட்டேன்' - அப்பர் 6.99-1. 1 மரகத துங்கமா - மயில் # ஞாயிறு விலகிய புரிசை இலங்கை பாடல் 426 பக்கம் 572 கீழ்க்குறிப்பு பாடல் 1184-ம் பார்க்க

X மலை ஏழு கயிலை, இமயம், மந்தரம், விந்தம், நிடதம், ஏமகூடம், நீலகிரி அன்றிக் கந்த மாதனங் கூட்டி எட்டெனவும் படும். O "நற்றவம் உமையாள் நங்கை பாதிரி நீழல் தங்கிப் புரிதவம் பகர்தலுற்றாம்" ஏடவிழ்ந்தலர் பாதிரி யின்னிழல். 'எண்ணருந்தவம் செய்தனள் யாவரும் கண்ணருஞ் சிவன் தன்னருள் காணவே' - திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம். - தேவி பாடலவனம் - சருக்கம் 36 தேவி தவ சருக்கம் 1, 2.