பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/80

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 73

  • அருச்சித்து (பூசித்து) அழகிய செம்மை வாய்ந்த கொச்சைக் சொல் பேசும் - திருந்தாப் பேச்சினைப் பேசும் கிளிபோன்ற வள்ளிக்கு வெட்சி மாலையைச் சூட்டினவனே!

கத்து அத்தி (ஒலிக்கின்ற கடலில்) தத்து அத்தில் (தத்து அதில்) - ஆபத்தான நிலையில் (இருந்த) (கொக்கை) மாமரமாம் சூரன்மீது, கைத்த (கையகத்ததான - கையில் இருந்த சத்திப் படையை ஏவும் (செலுத்தின. பெருமாளே) ! கற்புக்கு (அணிகலமாம்) சத்தி (பார்வதி) அளித்த அழகிய சத்தி வேல் ஏந்தும் பெருமாளே கச்சியிற் சொக்கப் பெருமாளே! (பிற்பட்டிட்டுத் தளர்வேனோ) 475. கொக்கின் நிறம்போலத் தலையிற் பற்றியுள்ள சிக்கத்து குடுமியின்) அளகக் கொத்து - மயிர்த் தொகுதி உற்று (வெண்மை நிறத்தை) அடைந்து (நான்) உக்கு - மக்கி மெலிந்து, நோய்க்கு ஆளாகி (நோயுற்றவனாய்) குக்கி குக்கல் உற்று) இருமி, (கக்கி) (வாந்தி செய்து) (கடையில்) வாழ்நாளின் இறுதியில், பற்றத்து உற்று (பல் தத்து உற்று) பற்களெல்லாம் ஆபத்தை அடைந்து, கழல விழுந்து ஒழிய, (கொத்தை) ஈனமான (அஞ்ஞானமான) சொற்களைக் கற்று உலகில் உள்ள பல பாஷைகளைத் இனி, தவத்தால் இளைத்த அத்தி - தேவசேனை எனக்கொண்டு தேவசேனையை மணந்து பலன்அளித்தார் - எனலுமாம்.

  • இங்ங்ணம் வள்ளியை அர்ச்சித்ததும் மாலை சூட்டினதும் முருகவேளுக்கு வள்ளியிடமிருந்த பெருங்காதலை விளக்குகின்றது.

"நின்றனைப் பாவிய னிங்கியே படர வல்லனோ' "உய்திறம் வேறெனக் குள கொள் ஈண்டுநின் கைதனில் இவ்வுயிர் காத்துக் கோடியால்" நின்னிரு பூங்கழல் அல்லது புகலொன் றில்லையால் நீங்கலன் நீங்கலன் நின்னை என்றுமே" - என முருகவேள் வள்ளியை நோக்கிக் கூறினராமே! (கந்த புராணம் - வள்ளி திருமணம் - 84-86)