பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/800

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேட்களம்) திருப்புகழ் உரை 241 ஒளி சுற்றிலும் பரவி (ஆன்மாக்களைப்) பாதுகாக்கின்ற திருவடியும், (மயிலின்புறம்) மயில்மேலிருந்து (நோக்கியனாமென) பாதுகாக்கின்றவனாம் என வந்து (உனது) கருணைக்கடலைக் காட்டி அருளிய திருக்கோலத்தையும் அடியேனைப் பொன்னினும் இனிமையான பார்வையுடனே அடியார்கள் (யான்பாடும்) முத்தமிழ்கொண்டு பாடிக் (கதி) புகவும், அல்லது அடியவர் பாடும் முத்தமிழ்கொண்டு யான் பாடிப் புகவும் (அடியேன்) மேலான நற்கதியைப் பெறவும், கடாகூஜித்துப்பார்த்த பார்வையையும் மறவேன்; தரை சிதற - பூமி அதிர, நாலு திசைகளிலுள்ள மலைகள் நெரிந்து பெர்டிபட்ப் பறையடித்துவந்த மூர்க்க அசுரர்களின் பெரியமுடிகள் சிதறுண்டு விழக், கடல் ஒலி செய்து வாய்விட, வேலைச் செலுத்தினவனே! சிவனது பத்தினியும், எமனை உதைத்த பாதங்களைக் கொண்ட சக்தி வாய்ந்தவளும், யாவர்க்கும் மூத்தவளும், (விநாயகி) தடைகளை (இடர்களை) நீக்குபவளும், அன்டங்களை இவ்வாறு சிருஷ்டித்தவளுமாகிய பார்வதி அருளிய குழந்தையே! விதுரனுக்கும், (அரவுக்கொடி) பாம்புக்கொடி கொண்ட துரியோதனனுக்கும் (விகட) வேறுபடும்படியான (துறவை) பிரிவினை (அல்லது விடகத்து உறவை) (மனம் வேறுபட்ட உறவை) (ஆக்கிய) உண்டு பண்ணின (இருவர் உறவையும் பேதப்படுத்தின) (மாதவன்) கண்ணபிரான், அருச்சுனனுடைய பெரிய தேர்க்குதிரைகளைப் (பார்த்தசாரதியாய்)ச் செலுத்தினவன் ஆகிய திருமாலின் மருகனே! - = (240ம் பக்கம் தொடர்ச்சி) போரில் அறமே வெல்லும் இதோ என்னுடைய ஒப்பற்ற வில்லையும் ஒடித்துத் தள்ளுகின்றேன் எனக் கூறி ஒடித்தெறிந்தார். வசையென்னை நீ சொன்னவாய் குருதி சோர வாள்கொடு" "துணிப்பன் யான்" * இனிச் சமரில் நின்று வெங்கணை தொடேன் எனா வில்லிரண்டினும் உயர்ந்த வில்லதனை வேறிரண்டு பட வெட்டினான்" (வில்லி. கிருஷ்ணன் துது - 129-131) -