பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/813

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை அளவற்ற 'மலர்விட்டு நிலமுற்று மறையச்செய் t அதுலச்ச மரவெற் யுடையோனே: வசையற்று முடிவற்று வளர்பற்றி 4 னளவற்ற வடிவுற்ற முகில்கிட்ணன் மருகோனே. X மதுரச்செ மொழிசெப்பி யருள்பெற்ற சிவபத்தர் வளர் விர்த்த கிரியுற்ற பெருமாளே. (3) வேப்பூர் (வட ஆற்காடு ஜில்லா ஆற்காட்டுக்குச் சமீபம், பாலாற்றங் கரையில் உள்ள தலம்.) தனதன தனதன தனதன தாந்த தாததான தநத தனதான 757. உபதேசம் பெற குரைகட லுலகினி லுயிர்கொடு போந்து கூத்தாடு கின்ற குடில்பேணிக்

  • வானோர் நிரம்பப் பூமாரி பொழிதல் - பாடல் 645-பக்கம் 510 குறிப்பு.

1. அதுல சமான மில்லாத

  1. தம் பொருட்டுக் கண்ணபிரான் துரியோதனனிடம் தூது செல்லவேண்டும் என்று பாண்டவர்கள் யோசித்தபொழுது, சகாதேவனை நோக்கிக் கண்ணபிரான் உன் யோசனை என்ன என்று கேட்கச் சகாதேவன் - பெருமானே! துரியோதனன் எங்களுக்குப் பூமி கொடுத்தால் என்ன? கொடாவிட்டால் என்ன? உங்கள் மாயையை யார் அறிவார்? உங்கள் திருவுளத்துக் கருத்து எதுவோ அதுவே எனக்கும் கருத்து' என்றான். இவன் நமது எண்ணத்தை வெளிவிட்டு விடுவான் என அறிந்து கண்ணபிரான் தனியாக ஓரிடத்திற் சகாதேவனை அழைத்துக் கொண்டுபோய் -பாரதப்போர் நடவாதிருக்க வழி என்ன சொல் என்றார். அப்போது of ன் பெருமானே! நீ பூபாரம் தீர்க்க வந்துள்ளாய்; உன்னையல்லால் வேறு யாராலும் அந்தப் போரை நிறுத்த முடியாது; உன்னை நான் கட்டிப்போட்டால் பாரதப்போர் வாராது" என்றான். அதைக் கேட்ட கண்ணபிரான் என்னை நீ எவ்வண்ணம் கட்டுவாய் எனச் சகாதேவன் "உன் வடிவத்தை காட்டு, கட்டுகிறேன் என்றான்" கண்ணனும் உடனே கட்டு பார்க்கலாமென்று தன்போலவே உருவம் "பதினாறாயிரம்" கொண்டான், சகாதேவன் மூல உருவம் இதுதான் என்று அறிந்து கண்ணபிரானது அடியிணைகளைத் தன் கருத்தினாற் கட்டினான். கண்ணபிரான் மகிழ்ந்து என் பாதத்தை இனி விடுக - இந்த

(தொடர்ச்சி பக்கம் 255)