பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/823

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கோட்டுமுலைத் தாங்குமிழை யான இடை கோடிமதி தோற்றமெனப் போந்த்அழ காணசிவ காமி.விறல் *கூற்றுவனைக் காய்ந்தஅபி ராமிமன தாரஅருள் கந்தவேளே! கூட்டுநதித் தேங்கியtவெ ளாறுதர ளாறுதிகழ் நாட்டிலுறைச் சேந்தமயி லாவளிதெய் வானையொடெ கூற்றுவிழத் தாண்டி யென தாகமதில் வாழ்குமர தம்பிரானே. |- H. (சிதம்பரத்துக்குத் தென்மேற்கு 15 - மைலிலுள்ள மன்னார்குடிக்குத் தெற்கு 4 மைல். திருஞானசம்பந்த ஸ்வாமிகள். திருநாவுக்கரசு ஸ்வாமிகள் ஆகிய இருவர் பாடல்பெற்றது.) 761. திருவடி பெற தானனம் தானான தாணனம் தானான தானனம் தானான தனதான வாருமிங் கேவிடி தோபனம் பாஷாண மால்கடந் தேபோமெ னியலூடே வாடிபெண் காள்பாயை போடுமென் றாசார வாசகம் போல்கூறி யனைமீதே, சேருமுன் காசாடை வாவியும் போதாமை தீமைகொண் டேபோமெ னடமாதர். சேரிடம் போகாம லாசுவந் தேறாமல் சீதளம் பாதார மருள்வாயே!

  • கூற்றுவனைக் காய்ந்த அபிராமி - பாடல் 751-பக்கம் 240 குறிப்பு.

1 வெள்ளாறு தரளாறு திகழ் நாடு -வெள்ளாறும் மணிமுத்த நதியுங் கூடும் இடமாகிய கூடலையாற்றுார் தரள ஆறு - மணி முத்த நதி தரளம் - முத்து

  1. எனது ஆகமதில் வாழ் குமரன் - இறைவனே. (சசா) உடலிடங்கொண்டாய்" திருவாசகம் - 22.5, 10.