பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/825

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை நாரணன் சிராம கேசவன் கூராழி நாயகன் பூவாயன் மருகோனே. *நாரதும் பூர்கீத மோதநின் றேயாடு நாடகஞ் சேய்தாள ரருள்பாலா; ஆரணங் கோடாழி போய்கிடந் தேவாட t சூரியன் தேரோட அயிலேவி. துாநற்ங் காவேரி சேருமொண் சிறாறு சூழ்கடம் பூர்தேவர் பெருமாளே. திருவரத்துறை. (இது திருநெல்வாயில் அரத்துறை எனப்படும். விருத்தாசலத்துக்குத் தென்மேற்கு 11-மைல் துரத்திலுள்ள பெண்ணாகடம் ரெயில்வே ஸ்டேஷனுக்குத் தென்மேற்கு 4 மைல். மூவர் தேவாரமும் பெற்ற ஸ்தலம். இங்குச் சிவபெருமான் திருஞான சம்பந்த ஸ்வாமிகளுக்கு முத்துக் குடையும் முத்துச்சிவிகையும் அளித்தருளியது.இத்திருப்புகழிற் கூறப்பட்டுளது.)

  • சிவ சந்நிதியில் நாரதரும் தும்புருவும் கிதம் இசைத்தல் "இலங்கும் ஏழிசை யாழெடுத் தியாவரும் உருகத் துலங்கு நாரதர் தும்புரு முதலியர் பாட"

- சிதம்பர புராணம் - திருச்சிற்றம்பல 44. கோல இசைத் தும்புரு நாரதர் . துதிகள் கூறுவாரால்" - திருநெல்வேலி புராணம் - தாம்பிரசபை நடனம் 42. "வந்து தும்புரு நாரதாதியர் மகரயாழ் இசை பகரவே சந்த்ரசேகரர் தையல் காட்டு சிங்கா சனத்தில் இருந்தனர்" ஆனந்த சவுந்தரிய நடனம் 19, நாரதர் பூசிக்க இறைவன் தந்த வரம்: "பண்தரும் வீணை நம்பால் வாசிக்கும் பதமும் தந்தோம்" வரம் பெற்று நாரதர் வாசிப்பது: "முனி தோளின் மன்னிய வீணை நாலிரு திசையும் மருவியோர் யோசனை கேட்க இன்னிசை சிறந்தெப் போதினு முக்கண் இறைவனையே துதி செயுமால்" - திருநெல்வேலிப் புராணம் - நாரதச் சருக்கம் - 19, 22 1 சூரியன் தேர் சூரன் சொற்படி வழிமாறிப் போய்க் கொண்டிருந்தது - பாடல் 658. பக்கம் 10 கீழ்க்குறிப்பு.