பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/829

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை செகத லத்தினிற் புகழ்ப டைத்தமெய்த் திருவ ரத்துறைப் பெருமாளே. (1) யாழ்ப்பாணாயன் பட்டினம். (யாழ்ப்பாணாயன்பட்டினம்’ என்பது அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராகிய திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாருடைய ஊராகிய திரு எருக்கத்தம்புலியூராக இருக்கலாம். நடுநாட்டில் விருத்தாசலத்துக்குத் தெற்கு 7மைல். ஈழநாட்டில் யாழ்ப்பாணம் என்னும் ஊர் இருக்கின்றது.) 763. ஞானம் பெற தாத்தா தானம் தத்தன தனதன தாத்தா தானம் தத்தன தனதன தாத்தா தானம் தத்தன தனதன தனதான பூத்தார் ஆடுங் கொத்தலர் குழலியர் பார்த்தால் வேலுங் கட்கமு மதன்விடு போர்க்கார் நீடுங் கட்சர மொடுநமன் விடுதுாதும். *போற்றாய் நாளுங் கைப்பொரு ளுடையவர் மேற்றா ளார்தம் பற்றிடு ப்ரமையது பூட்டா மாயங் கற்றமை விழியின ரமுதுாறல்; வாய்த்தார் பேதஞ் செப்புபொய் விரக்கியர் நூற்றேய் நூலின் சிற்றிடை யிடர்பட வாட்டாய் வீசுங் கர்ப்புர ம்ருகமத மகிலாரம். மாப்பூ ணாரங் கச்சணி முலையினர் 1 வேட்பூ ணாகங் கெட்டெனை யுனதுமெய் வாக்கர்ல் ஞானம் பெற்றினி வழிபட அருளாயோ; ஆத்தாள் மால்தங் கைச்சிக ணிகையுமை கூத்தா டாநந் தச்சிவை திரிபுரை யாட்பேய் பூதஞ் சுற்றிய பயிரவி புவநேசை.

  • போற் றாய் - போல் தாய், தாய் - தாவி, 1 வேட் பூணு வேட்கை பூண்டு. 4 தேவி ஆளும் பேய்ப்படை, பூதப்படை 'தொல்லை நாயகியுடைய பேய்க்கணங்கள் சொல்லுவாம்"

. தக்கயாக - 120. * இறைவி. பூதமும் கழுதுமே ககன முழுதுமே" - தக்கயாக 55,