பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சித்தத் துக்குப் பித்துற் றுச்சச் சித்ரக் கொடியுற் றழியாதே. செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச் செச்சைத் தொடையைத் தரவேணும் கொத்துத் திக்குப் பத்துட் புக்குக் குத்திக் கிரியைப் பொரும்வேலா. கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக் கொச்சைக் குறவிக் கினியோனே, சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத் துக்கத் தையொழித் திடும்வீரா. சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச் சொக்கப் பதியிற் பெருமாளே (26) குறிப்பு:- இப்பாடலின் ஒவ்வோரடியிலும் இறுதியிலுள்ள பாகத்தை எடுத்தமைக்கப் பின்வருமாறு பிறிதொரு பாடலாமாறு காண்க: சத்தப் படுமைக் கடலாலே, தட்டுப் படுமப் பிறையாலே, சித்ரக் கொடியுற் றழியாதே செச்சைச் தொடையைத் தரவேணும்: குத்திக் கிரியைப் பொரும்வேலா. கொச்சைக் குறவிக் கினியோனே, துக்கத் தையொழித் திடும்வீரா. சொக்கப் பதியிற் பெருமாளே.