பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/859

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வங்க வாரிதி முறையிட நிசிசரர் துங்க மாமுடி பொடிபட வடவனல் மங்கி நீறெழ அலகைகள் நடமிட மயிலேறி. 'வஞ்ச வேல்கொடு முனிபவ அழகிய f சண்பை மாநக ருறையுமொ ரறுமுக வந்த வானவர் மனதினி லிடர்கெட நினைவோனே, பங்க வீரியர் : பறிதலை விரகினர் மிஞ்சு பாதக ரறநெறி பயனிலர் ந்த மேவிய பகடிகள் கபடிகள் நிலைகேடர். பண்பி _லாதவர் கொலைசெயு மனதின ருயுரிய கழும்சை O பஞ்ச பாதகர் **முனைகெட அருளிய ப்ெருமாளே. (6)

  • வஞ்சவேல் - பாடல் 750 - கீழ்க்குறிப்பைப் பார்க்க

t. சிகாழியின் பன்னிரு பெயர்களின் - பெயர்க் காணரம்: (1) கணபதியால் கொல்லப்பட்ட கஜமுக அசுரனுக்கு அஞ்சின வேணு என்னும் இந்திரன் பூசித்த தலமாதலின் வேணுபுரம்" (2) சூரனுக்கு அஞ்சின தேவர்கள் புகலிடமாக வந்த தலமாதலின் 'திருப்புகலி" (3) தேவகுருவாம் பிரகஸ்பதி தான் இழந்த அதிகாரத்தை மீட்டும் பெறப் பூசித்து அதிகாரத்தைப் பெற்ற தலம் வெங்குரு (4) பூவுந் தாராயும் பூசித்ததால் பூந்தராய் எனப் பெயர். (5) அமிர்தம் பங்கிட்டபொழுது திருமாலால் சிரம் தறிபட்ட ராகு கேதுக்களின் இரண்டு சிரங்களும் தமது உடல் வேண்டிப் பூசித்ததால் சிரபுரம்: (6) கெளதம முநிவர் சாபத்தால் புறாவனர் பிரசாபதி என்னும் ரிஷி - தான் உண்ணத் தன் உடல் மாமிசத்தைக் கொடுத்த அரசன் நல்ல உடல் பெறவும், தன் சாபம் திரவும் பூசித்துப் பேறு பெற்ற தலமாதலின் புறவம். (7) துர்வாசருடைய சாபத்தால் கிருஷ்ணபகாவானைச் சார்ந்த கோபாலரெல்லாரும் சண்பைக் கதிர்களால் குத்துண்டு மாண்டார்கள்: கிருஷ்ணபகவானும் பரமபதம் அடைந்தார். அந்தத் தோஷம் தம்மைத் தாக்காதிருக்க துர்வாசம் பூசித்த தலமாதலின் துர்வாசர் சண்பைமுனி எனப்பட்டார், தலம் சண்பை எனப்பெயர் பெற்றது; இந்தச் சாப வரலாற்றை பாடல் 268 பக்கம் 166 கீழ்க்குறிப்பிற் X பார்க்கவும் (1 தொடர்ச்சி 301 பக்கம் பார்க்க).