பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 79 477. பொக்குப் பை-குற்றம் நிறைந்த பை, (கத்தம்) மலம் (தொக்கு தொகு கூடின பை, குத்து பொய்த்து எத்து-சுடு சொல் பொய்யொடு கலந்து வஞ்சகம், ஆபத்து == இவையெல்லாம் கூடிய குடிசை உடலை விரும்பி (பொச்சை) குற்றமானதும், (பிச்சு) பைத்தியம் கொண்டதும், அற்பமானதும் (கொச்சை) இழிவானதுமான சொற்களைக் கற்று அழகிய விசித்திரமான ரவிக்கை பூண்ட மலைபோன்ற கொங்கைகளை உவிெடய மாதர்களைச் சேருதலால் (வரும்). (துக்கத் துக்கத்தில்) பெருந்துக்கத்தில் (அல்லது துன்பநோயில்) சிக்குப்பட்டிட்டு-மாட்டிக் கொண்டு, வேதனையுற்று, இளைத்துச் சுழற்சியுறாமல் சஞ்சலப்படாமல். பரிசுத்தமான நெஞ்சத்துடன் பத்திபூண்ட பத்தர்களுக்கு (ஒத்து) இணையாக (நான் ஒழுகி), சற்று அர்ச்சிக்க றிதளவேனும் (உன்னைப்) பூசிக்கும் பாக்கியத்தைப் பெறுவேனோ! திக்குத் திக்கு அற்று எந்தத் திக்கிலும் திக்கு (உதவி) இல்லாதுபோய்-தனிப்பட்டுபை தத்து அத்தி - பசிய அலைமோதுகின்ற கடலுள் செல்போய்ச் சேர்ந்த இலையொடு கூடிய மாமரமாம் சூரனொடு போர்புரிந்த வேலனே! (செப்பச் சொர்க்கத்து) செவ்விய விண்ணுலகில் (அல்லது...செப்பு அ சொர்க்கத்தில் ... விசேடமாகச் சொல்லப்படும் அந்த விண்ணுலகில் உள்ள), செப் பொன்-செம்பொன் போன்ற தத்தைக்கு. கிளியனைய தேவசேனையை, செச்சைக் கொத்து (வெட்சி மலர்க் கொத்தால்) ஒப்பித்து அலங்கரித்து, அணிவோனே-மாலை சூட்டுபவனே!